Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”ஃபீல்டிங்கில் கவனம் தேவை” சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி அட்வைஸ்.. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்!

சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை பெறும். அதேபோல் கொல்கத்தா அணி தோல்வியடைந்தால் ஐபிஎல் தொடரில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

CSK Captain MS Dhoni won the toss and chose to bat against KKR at Chepauk

இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பேசுகையில், முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே திட்டம். அதன்பின்னர் எங்கள் ஸ்பின்னர்களிடம் ஆட்டத்தை கொடுக்க வேண்டும். பவர் பிளே ஓவர்களுக்கு பின்னரே எது சரியான ஸ்கோர் என்பதை பார்க்க முடியும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம் என்றே நினைக்கிறேன். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், ஃபீல்டிங் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. இந்தப் போட்டியிலும் அதே அணியுடன் களமிறங்குகிறோம் என்று தெரிவித்தார்.

பின்னர் கேகேஆர் அணி கேப்டன் ராணா பேசுகையில், நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். முதல் போட்டியில் எந்த அழுத்தத்துடன் விளையாடினோமோ, அதே பிரஷருடனே இந்தப் போட்டியிலும் களமிறங்குகிறோம். எந்தப் போட்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. எந்த துறையில் மோசமாக செயல்பட்டாலும், முடிவு எங்களுக்கு எதிராகவே அமையும். அதனால் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட தீவிரமாக இருக்கிறோம். அனுகுல் ராய்-க்கு பதில் வைபவ் அரோரா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

சென்னை அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரஹானே, ராயுடு, சிவம் துபே, மொயின் அலி, ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா

கேகேஆர் அணி விவரம்: குர்பாஸ், ஜேசன் ராய், நிதிஷ் ராணா, ரஸ்ஸல், ரிங்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்சித் ராணா, சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி

Story first published: Sunday, May 14, 2023, 19:11 [IST]
Other articles published on May 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+