Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டோக்ஸை வாங்கியவுடன் தோனி கூறியது என்ன?.. அடுத்த சிஎஸ்கே கேப்டனா?.. காசி விஸ்வநாதன் ஓபன் டாக்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸை ஏலம் எடுத்தவுடன் கேப்டன் எம்.எஸ்.தோனி என்ன கூறினார் என்பது குறித்து காசி விஸ்வநாதன் விளக்கியுள்ளார்.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் படு விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தது. இதில் அணிகள் யாரும் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்களுடன் வீரர்களை வாங்கின.

ஐபிஎல் ஏலத்தில் எப்போதும் முதலில் அமைதிகாத்துவிட்டு, கடைசி நேரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு வீரராக தொகையை ஏற்றிவிட்டு மாஸ்டர் ப்ளான் போட்டது.

சான் கரண் மிஸ்

சான் கரண் மிஸ்

அணியில் டுவைன் பிராவோவுக்கு மாற்றாக இங்கிலாந்தின் சாம் கரணை சிஎஸ்கே வாங்கிவிடும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சாம் கரணின் ஏல தொகை ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே அதிகபட்சமென ரூ.19.50 கோடிக்கு சென்றது. இதனையடுத்து கேமரூன் கிரீனையும் தவறவிட, இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.5 கோடிக்கு வாங்கி அசத்தியது.

என்ன பலன்

என்ன பலன்

பென் ஸ்டோக்ஸும், எம்.எஸ்.தோனியும் ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பதால் நல்ல காம்போவாக இருக்கும். மேலும் இந்தாண்டுடன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெற அதிக வாய்ப்பு இருப்பதால், அடுத்த கேப்டன்சி பதவியும் ஸ்டோக்ஸுக்கு செல்லுமா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.

தோனியின் பதில்

தோனியின் பதில்

இந்நிலையில் அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அதில், பென் ஸ்டோக்ஸை வாங்கியது எங்களுக்கு அதிர்ஷ்டம் தான். ஏனென்றால் கடைசி நேரத்தில் தான் அவர் கிடைத்தார். அவருடன் பணியாற்றுவதை எதிர்பார்த்துள்ளோம். ஸ்டோக்ஸை ஏலம் எடுத்தவுடன் தோனிக்கும் உடனே தகவல் கொடுக்கப்பட்டது. அதனை கேட்ட அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 2வது முறையாக ஜோடி சேர்வதால் கூடுதல் மகிழ்ச்சி ஆகும்.

கேப்டன்சி வாய்ப்பு

கேப்டன்சி வாய்ப்பு

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்று கூறவில்லை. ஆனால் கேப்டன் தோனி தான் இதுகுறித்து இறுதி முடிவை எடுப்பார். தற்போதைய அணியை பார்க்கையில் கெயில் ஜேமிசனுக்கு காயம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஸ்டீஃபன் ப்ளெமிங் அவருடன் தொடர்ந்து இணைப்பில் இருந்துக்கொண்டே தான் இருக்கிறார் என காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

Story first published: Saturday, December 24, 2022, 10:26 [IST]
Other articles published on Dec 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+