சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்ட நிலையில், "நாம் மீண்டு வருவோம்" என்று அந்த அணியின் மருத்துவர் மது ட்விட்டரில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கும் 2 ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் டி.மது, ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் "சிங்கங்களே நம்பிக்கையுடன் இருங்கள். நாம் மீண்டும் வருவோம். படம் இன்னமும் மீதமுள்ளது" என்று கூறியுள்ளார்.
தற்போதைய தடையால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலங்கவில்லை என்பதையே மருத்துவர் மதுவின் ட்வீட் வெளிப்படுத்துவதாக விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.