Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே செய்த காரியத்தை கவனிச்சீங்களா!

Recommended Video

அதிக சிக்ஸ் அடித்து புதிய சாதனை படைத்த சென்னை- வீடியோ

சென்னை: ஐபிஎல் சீசன் 11 சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற கொண்டாட்டங்கள் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இந்த ஐபிஎல்லில் சிஎஸ்கே செய்த ஒரு சாதனையை பலரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து முடிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய சிஎஸ்கே, துவக்கம் முதலே கோப்பையை வெல்லும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 2வது இடத்தையும் பிடித்தன.

மும்பையில் 27ம் தேதி நடந்த பைனலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே 10 சிக்சர்கள் அடித்தது. அதில் 8 சிக்சர்களை ஷேன் வாட்சன் அடித்தார்.

சிஎஸ்கே டாப்

சிஎஸ்கே டாப்

இந்த 10 சிக்சர்கள் மூலம், ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. சிஎஸ்கே 145 சிக்சர்கள் அடித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகவும் அதிகமாகும். பெங்களூர் அணி, 2016ல் 142 சிக்சர்கள் அடித்தது.

கோஹ்லி சாதனை

கோஹ்லி சாதனை

அந்த சீசனில் பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி 38 சிக்சர்கள் அடித்தார். ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமை கோஹ்லியிடமே உள்ளது. அப்போது டிவில்லியர்ஸ் 37, கிறிஸ் கெயில் 21 சிக்சர்கள் அடித்தனர்.

பறக்க விட்ட வாட்சன்

பறக்க விட்ட வாட்சன்

இந்த சீசனில் 145 சிக்சர்கள் அடித்து, ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த சாதனையை சிஎஸ்கே பெற்றுள்ளது. வாட்சன் அதிகபட்சமாக 35 சிக்சர்கள் அடித்துள்ளார். அம்பதி ராயுடு 34, கேப்டன் மகேந்திர சிங் தோனி 30 சிக்சர்களை பறக்க விட்டனர். ரெய்னா 12, பிராவோ 10 சிக்சர்கள் அடித்தனர்.

கொல்கத்தா 3வது இடம்

கொல்கத்தா 3வது இடம்

ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த அணிகளில் கொல்கத்தா இந்த சீசனில் 130 சிக்சர்கள் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் 2014ல் 127 சிக்சர்கள் அடித்து 4வது இடத்தில் உள்ளது. மும்பை 2015ல் 120 சிக்சர்கள் அடித்து 5வது இடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, May 30, 2018, 12:09 [IST]
Other articles published on May 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+