இன்று பெங்களூர் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல்

பெங்களூர் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று பெரும் தெம்புடன் காணப்படுகிறது. மறுபக்கம் டோணி இல்லாத நிலையில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி என்ற நிலையில் சென்னை காணப்படுகிறது.
பெங்களூர் அணி ஆறு புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அணி நான்கு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் அமர்ந்திருக்கிறது.
சென்னை அணி தோல்வியுடன் தனது வேட்டையைத் தொடங்கியது. இறுப்பினும் அடுத்தடுத்து 2 போட்டிகளில் வென்ற சென்னை, தனது நான்காவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது.
இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். போட்டியை திசை திருப்பும் திறமையுடன் கூடிய வீரர்கள் இரு அணிகளிலும் உள்ளனர். எனவே இந்தப் போட்டி இரு அணி ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியின் கேப்டன் டோணி இன்னும் குணமாகவில்லை. இதனால் இன்றைய போட்டியிலும் சுரேஷ் ரெய்னாவே கேப்டனாக இருப்பார்.
மாத்யூ ஹெய்டன் பார்முக்கு வந்து விட்டார். பார்த்திவ் படேலும் நன்றாக விளையாடுகிறார். இருவரும் இணைந்து ரன் குவித்தால் அணிக்கு பளு குறையும்.
பந்து வீச்சில் பாலாஜி, முரளிதரன் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர்.
பெங்களூர் அணியிலும் கல்லிஸ் சூப்பர் பார்மில் இருக்கிறார். மணீஷ் பாண்டேவும் தயாராக இருக்கிறார். எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications