பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டி.. சென்னை அபார வெற்றி!
Recommended Video

மொஹாலி: ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியுள்ளது.
ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் 4வது இடத்திற்கு போட்டியிடும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்தது.

சென்னை அணியில் இருந்த அஸ்வின் தற்போது பஞ்சாப் அணியை வழிநடத்துகிறார். அஸ்வின் அந்த அணியின் கேப்டனாக வேறு இருக்கிறார். இரு அணிகளும் சம பலத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டி மிகவும் முக்கியமானது.
இந்த போட்டி புனே மைதானத்தில் நடந்தது. இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
தற்போது இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச முடிவெடுத்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. மனோஜ் திவாரி 35, கருண் நாயர் 54 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 19.4 ஓவரில் 10 விக்கெட்டையும் இழுந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன்பின் இறங்கிய சென்னை அணி வித்தியாசமாக ஆடியது. பேட்டிங் ஆரடர் மாற்றி மாற்றி இறக்கப்பட்டனர். ஆனாலும் சென்னை வெற்றியை நோக்கி சென்றது. ரெய்னா 61, சாஹர் 39 ரன்கள் எடுத்தனர். சென்னை எளிதாக 19.1 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications