இப்படி ஒரு வாய்ப்பை நழுவ விடலாமா தோனி.. உறைந்து போன சிஎஸ்கே.. இனிதான் சுதாரிக்கணும்!
சென்னை: சிஎஸ்கே அணி குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரரை ராஜஸ்தான் அணி கொத்திக்கொண்டு போய் உள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் பல இளம் வீரர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. முக்கியமாக தமிழக வீரர்கள் பலர் இந்த தொடரில் கலக்கி உள்ளனர்.
இந்த தொடர் முழுக்க தமிழக அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்றால், எந்த அளவிற்கு வீரர்கள் திறமையானவர்கள் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.அதிலும் தமிழக ஆல் ரவுண்டர்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

ஷாருக்குக்கான்
இந்த தொடரில் தமிழக அணிக்காக ஆடிய ஷாருக்கான் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். பினிஷிங் பேட்ஸ்மேனான இவர் இந்த தொடர் முழுக்கவே தமிழக அணியில் ஆதிக்கம் செலுத்தினார். ஒரே ஓவரில் மேட்சை மாற்றுவது, எளிதாக சிக்ஸ் அடிப்பது என்று இவர் கவனம் ஈர்த்தார்.

எப்படி
தமிழக அணி இந்த தொடரில் பல போட்டிகளில் வெற்றிபெற ஷாருக்கான் முக்கியமான காரணமாக இருந்தார். இதனால் ஷாருக்கானை பல ஐபிஎல் அணிகள் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. முக்கியமாக சிஎஸ்கே அணி இவரை எடுக்க வேண்டும். சிஎஸ்கேவில்தான் பினிஷர் இல்லை என்று புகார் வைக்கப்பட்டது.

பினிஷர்
கடைசியில் சிஎஸ்கே அணிக்காக உறுதியாக ஆடும் ஆட்கள் இல்லை. இதனால் ஷாருக்கானை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணி முந்திக்கொண்டு ஷாருக்கானை அழைத்துள்ளது. இவரை டெஸ்டிங் செய்ய ராஜஸ்தான் அணி முடிவு செய்துள்ளது.

வாய்ப்பு
இதனால் ராஜஸ்தான் அணிதான் இவரை ஏலத்தில் எடுக்கும் என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. சிஎஸ்கே இவரை ஏலம் எடுக்கும் என்று கருதப்பட்ட நிலையில் ராஜஸ்தான் முந்திக்கொண்டுள்ளது.முக்கியமான வாய்ப்பை சிஎஸ்கே இதனால் நழுவவிட்டுள்ளது.

ஏலம்
வரும் பிப்ரவரி 18ம் தேதி ஏலம் நடக்க உள்ளது. இதில் கண்டிப்பாக சிஎஸ்கே இவரை குறி வைக்க வேண்டும். ராஜஸ்தான் இவருக்கு அதிக தொகை கொடுக்க முயன்றாலும், சிஎஸ்கே இவரை கொக்கி போட்டு தூக்கினால் மிடில் ஆர்டரில் களமிறக்க வசதியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications