சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடப்பு சீசனில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை வீரர் மதிஷா பதிராணா விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். ஒரு ஓவருக்கு 7.72 ரன்கள் என எக்கனாமி வைத்திருக்கிறார்.
பதிரானாவின் வருகைக்குப் பிறகுதான் சிஎஸ்கே அணி தொடர்ந்து முக்கிய போட்டிகளில் வெற்றி பெற தொடங்கியது. இந்த நிலையில் இலங்கை வீரரான பதிராணா இந்திய அணியில் விளையாட வைக்க பெண் ஒருவர் கொடுத்துள்ள ஐடியா சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மற்ற நாடுகளில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களை தங்களது நாட்டு தேசிய அணிக்காக விளையாட வைப்பார்கள். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இயன் மார்கனே அயர்லாந்து அணியில் விளையாடியவர் தான். இதே போன்று ஆஸ்திரேலியா அணியில் நெதர்லாந்து வேகப் பந்துவீச்சாளர் விளையாடியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
இதேபோன்று மதிஷா பதிராணாவையும் இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அவர் கொடுத்திருக்கும் ஐடியா தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி இருக்கிறது. ரோகினி ஸ்ரீதரன் என்ற அந்தப் பெண், பதிராணா, இந்தியப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இங்கே அழைத்து வாருங்கள். அப்படி செய்தால் அவர் குடியுரிமை பெற்று இந்திய அணிக்காக விளையாடலாம் அல்லவா என அவர் ஐடியா கொடுத்திருக்கிறார்.

பலரும் இந்த ஐடியாவை வரவேற்று சீக்கிரம் செய்யுங்கள் என அவருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே இலங்கை சுழற் பந்துவீச்சு ஜாம்பவான் முரளிதரனும் சென்னை பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் தொடர்ந்து இலங்கைக்கு தான் விளையாடினார் என விளக்கம் கொடுத்துள்ளனர். மேலும் இந்தியாவில் திறமைக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் நமது வீரர்களே நாம் வைத்து விளையாடிக் கொள்ளலாம் எனும் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்.