Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎலில் உச்சம் தொட போகும் சிஎஸ்கே வீரர்.. தோனி கொடுத்த அறிவுரை.. 51 விக்கெட் வீழ்த்திய துஷ்பாண்டே

அகமதாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் இம்முறை முழு உடல் தகுதியுடன் விளையாடும் தேஷ்பாண்டே தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக காத்துக் கொண்டுள்ளார். ஐபிஎல் தொடர் இளம்பிரர்களின் திறமையை கண்டறிய தொடங்கப்பட்ட தொடர்.

இதில் தோனியின் பட்டறையில் விளையாடி தான் அஸ்வின் ,தீபக்சாகர், ஷர்துல் தாகூர் எல்லாம் இந்திய அணிக்காக விளையாடினார்கள். தற்போது அந்த வரிசையில் சிஎஸ்கே வின் இளம் படையான தேஷ்பாண்டேவும் இடம் பெறுவார் என்ற நம்பிக்கை கிரிக்கெட் வல்லுனர்களிடையே ஏற்பட்டுள்ளது.

CSK Fast bowler Deshpande reveals how dhoni advice improves his performance

கடந்த சீசனில் சிஎஸ்கே அணி முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, தேஷ்பாண்டே போன்ற திறமைகளை கண்டறிந்து வாய்ப்பு கொடுத்தது. இதில் தேஷ்பாண்டே கடந்த சீசனில் இரண்டு போட்டியில் மட்டும் விளையாடினார்.ஆனால் அதன் மூலம் கிடைத்த அனுபவத்தில் தேஷ்பாண்டே உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் கடந்த முறை ஐபிஎல் சீசன் முடிந்தவுடன் நான் தோனி பாயிடம் உரையாடினேன். தோனி பாய் எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அது ஒரு வேகப்பந்துவீச்சாளராகவும் தனிநபர் ஆகும் என்னுடைய வளர்ச்சிக்கு மிகவும் உதவியது. தோனியின் வார்த்தைகள் நான் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட உதவியது.

கடந்த சீசனில் மட்டும் நான் 51 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். என்னுடைய மாநிலத்தில் வேறு யாரும் இந்த சாதனையை செய்தது கிடையாது. நான் தோனி பாய் இடம் இருந்து கிரிக்கெட் போட்டியை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். நமது அணி நெருக்கடியை சந்திக்கும் போது நமக்கான பொறுப்பை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அணிக்காக போராட வேண்டும் என்று தினேஷ் பாண்டி கூறியுள்ளார்.

CSK Fast bowler Deshpande reveals how dhoni advice improves his performance

இம்முறை முகேஷ் சௌந்தரி இல்லாத நிலையில் தேஷ் பாண்டேவும் தீபக் சாஹரும் தான் சிஎஸ்கே அணியின் பவர் பிளேவில் பந்து வீசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கேவுக்கு வருவதற்கு முன்பே தேஷ்பாண்டே டெல்லி அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் கோட்டை விட்ட துஷ்ஹார் தேஷ்பாண்டே இந்த சீசனில் புதிய கோட்டையை உருவாக்குவார் என நம்பப்படுகிறது.

Story first published: Friday, March 31, 2023, 8:47 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+