Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - நோ தலைவரே..! சிஎஸ்கே வீரர் மகாலா 2 ஓவர் மட்டும் வீசியது ஏன்? பின்னால் வந்த அதிர்ச்சி செய்தி

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் மகாலா 2 ஓவர் மட்டுமே வீசினார். டெத் ஓவர் பவுலராக அறியப்பட்ட மகாலாவை தோனி போட்டியின் தொடக்கத்தில் பயன்படுத்தாமல் இருந்தார்.

முதல் 10 ஓவரில் ராஜஸ்தான் அணி 95 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி கட்டத்தில் மகாலாவை தோனி பயன்படுத்துவார் என கருதப்பட்ட நிலையில், தோனி, இளம் வீரர்களான ஆகாஷ் சிங் மற்றும் தேஷ்பாண்டேவை பயன்படுத்தினார்.

CSK Fast bowler sisanda magala injured his hand while fielding

இந்த இளம் வீரர்கள் கடைசி 24 பந்தில் 29 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தனர். இந்த நிலையில் தான் மகாலாவுக்கு கையில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அஸ்வின் கேட்சை பிடிக்கும் போது மகாலாவுக்கு கையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் தான பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வரும் 17ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மகாலா பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. ஏற்கனவே நியூசிலாந்து வீரர் ஜேமிசனுக்கு காயம் அடைந்தது என்பதால் தான் மகாலா வந்தார்,

தற்போது மகாலாவுக்கும் காயம் அடைந்துவிட்டது. தற்போது சிஎஸ்கே அணியில் பிரிட்டோரியஸ், பதிரத்னா ஆகிய 2 பவுலர்கள் மட்டும் உள்ளனர். எனினும் இன்றைய ஆட்டத்தில் ஆகாஷ் சிங் மற்றும் தேஷ் பாண்டே ஆகியோர் தோனிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதால், இவ்விரு வீரர்களும் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, April 12, 2023, 21:56 [IST]
Other articles published on Apr 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+