
ஸ்கோடாவுடன் கைகோர்ப்பு
சிஎஸ்கேவின் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட்டுடன் அந்த அணி 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. முன்னதாக முத்தூட் பைனான்சுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதையடுத்து இந்த புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு 75 கோடி ரூபாய்க்கு இந்த புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சிறப்பான சிஎஸ்கே
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கடந்த 2008 முதல் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறது. இடையில் இரண்டு ஆண்டுகள் தடை பெற்ற நிலையில் 3 முறை கோப்பைகளை வென்றுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் டைட்டில் ஸ்பான்சராக ஏர்செல், முத்தூட் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இருந்துள்ளன.

2001 முதல் செயல்பாடு
இந்நிலையில் தற்போது ஸ்கோடாவுடன் அந்த அணி கைகோர்த்துள்ளது. ஐரோப்பாவின் கார் உற்பத்தி நிறுவனமன ஸ்கோடா ஆட்டோவின் கிளை நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2001 நவம்பர் முதல் செயல்பட்டு வருகிறது.

சிஎஸ்கே ஜெர்சியில் இடம்பெறும்
இந்நிலையில் வரும் 14வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் மஞ்சள் நிற ஜெர்சியில் ஸ்கோடாவின் லோகோ இடம்பெறும். இதுகுறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் சிஎஸ்கே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications