சி.எஸ்.கே. ஏலத்தில் எடுக்கப்போகும் முதல் வீரர் இவர் தான் – மூத்த வீரர் வெளியிட்ட ரகசியம்
சென்னை: ஐ.பி.எல். 2022ஆம் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறுவதால், பல அணிகள் தங்களது முக்கியமான வீரர்களை விடுவித்துள்ளது.
Recommended Video
இயக்குனர் விக்ரமன் படத்தில் வரும் குடும்பத்தை போல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சின்ன தல ரெய்னா, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்களை விடுவித்தது.

சென்னை அணியில் ரெய்னா இல்லை என்றால், நாங்கள் சென்னை அணியை பின்தொடர மாட்டோம் என்று ரசிகர்களம் கருத்து தெரிவித்து வந்தனர்.
உ.பி. மாநிலத்தில் தற்போது வசித்து வரும் ரெய்னா, லக்னோ அணிக்காக விளையாட விரும்புவதாகவும், அதனால் தான் சென்னை அணியில் இடம்பெறவில்லை என்றும் தகவல் வெளியானது. இதனால் ரெய்னாவை வேறு அணியில் தான் பார்க்க முடியும் என்று ரசிகர்கள் வேதனையில் இருந்தனர்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தவரும், தோனியின் நண்பருமான உத்தப்பா, ஒரு ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார். அதில் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை அணி, வாங்கப்போகும் முதல் வீரரே ரெய்னா தான் என்று தெரிவித்துள்ளார்.
ஃபார்மில் இல்லாத ரெய்னா, மீண்டும் ரன் குவிக்க ஓரிரு போட்டியே போதும் என்றும், இதனால் ரெய்னாவை சென்னை அணி அவ்வளவு சீக்கிரத்தில் விடாது என்று உத்தப்பா தெரிவித்துள்ளார். உத்தப்பாவின் இந்த கருத்து சென்னை அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications