இத்தனை பேர் இருக்காங்க.. தோனிக்கு பறந்த அட்வைஸ்.. குறைந்த தொகைக்கு கொக்கி போட்டு தூக்கும் சிஎஸ்கே
சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிடம் அதிக அளவில் பணம் இல்லாத காரணத்தால் இளம் வீரர்களை குறைந்த விலைக்கு அந்த அணி குறி வைக்கும் என்கிறார்கள்.
2021 ஐபிஎல் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் இதற்கான ஏலம் சென்னையில் நடக்க உள்ளது. மினி ஏலம்தான் நடக்க போகிறது என்றாலும் இதில் நிறைய சுவாரசியங்கள் நடக்கலாம்.
முக்கியமாக ஒவ்வொரு அணியும் பல புதிய வீரர்களை இந்த முறை ஏலத்தில் குறி வைக்கும் என்று கூறப்படுகிறது.

எப்படி
2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிடம் அதிக அளவில் பணம் இல்லாத காரணத்தால் இளம் வீரர்களை குறைந்த விலைக்கு அந்த அணி குறி வைக்கும் என்கிறார்கள். 6 வீரர்களை ரிலீஸ் செய்த பிறகு சிஎஸ்கே அணியிடம் 22.5 கோடி ரூபாய் இருந்தது. ஆனால் அதன்பின் சிஎஸ்கே அணி ராபின் உத்தப்பாவை டிரேட் செய்து வாங்கியது.

எவ்வளவு
இதனால் சிஎஸ்கே அணியிடம் இருக்கும் தொகை 19.5 கோடியாக குறைந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி பெரிய அளவில் வெளிநாட்டு வீரர்களுக்கும், மூத்த வீரர்களுக்கும் இந்த சீசனில் குறி வைக்க முடியாது. இதனால் சிஎஸ்கே அணி குறைந்த தொகைக்கு இளம் வீரர்களை அணியில் எடுக்கும் என்கிறார்கள்.

இளம் வீரர்கள்
இதற்காக சிஎஸ்கே அணி சையது முஷ்டாக் கோப்பையில் ஆடிய ஸ்பின் பவுலர்களை குறி வைக்கும். முக்கியமாக தமிழக அணியில் கலக்கிய ஸ்பின் பவுலர்கள், மிடில் ஆர்டர் வீரர்களை சிஎஸ்கே அணி குறி வைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக லிஸ்ட் தயார் செய்யப்பட்டு வருகிறது.

லிஸ்ட்
அதன்படி தமிழக அணியில் இடம்பெற்று இருந்த பாபா அபராஜித், சித்தார்த் மணிமாறன், ஷாருக்கான், ஹரி நிஷாந்த் போன்ற வீரர்களை சிஎஸ்கே குறி வைக்கும் என்கிறார்கள். அருண் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களை கூட சிஎஸ்கே அணுக வாய்ப்புள்ளது.

குறைந்த தொகை
இவர்களை மற்ற அணிகள் பெரிய அளவில் பணம் கொடுத்து வாங்காது. இதனால் குறைந்த விலையில் இவர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது. இதனால் இன்னும் இரண்டு வாரத்தில் நடக்க உள்ள ஏலம் பெரிய அளவில் திருப்பங்களை சந்திக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications