For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேன்னாலே தனி கெத்துதான்... சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் அதுல இருக்காங்கல்ல

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிஎஸ்கே என்றாலே தனி கெத்துதான் என்று அந்த அணியின் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ள முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் உலக அளவில் ஜாம்பவான்கள் விளையாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

CSK is a special IPL side with Legends of World Cricket: Murali Vijay

ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்ற மூன்று முறையும் முரளி விஜய் அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், அணியில் புதிதாக வரும் இளம் வீரர்கள், சர்வதேச வீரர்களுடன் ஒன்றாக இணைந்து அவர்களுடைய அனுபவங்களை பெறமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்தி அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளின் தலையெழுத்தை அறிந்து கொள்ள ரசிகர்கள், வீரர்கள் உள்ளிட்டவர்கள் ஆவலுடன் இருந்தநிலையில், அது தற்போது காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆயினும் ஐபிஎல் குறித்தும், அணிகள் குறித்தும் அதில் விளையாடும் வீரர்கள் குறித்தும் பேசுவதில் நம்முடைய வீரர்கள் தொடர்ந்து ஆவலுடன் தான் இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது சிஎஸ்கே வீரர் முரளி விஜய் தன்னுடைய அணியை உயர்த்தி பிடித்துள்ளார். கடந்த 2009 முதல் 2013 வரையில் அணியில் இருந்த முரளி விஜய் மீண்டும் 2018 அணியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், சிஎஸ்கே மிகவும் சிறப்பான அணி என்று கூறியுள்ளார் முரளி விஜய். உலக அளவில் ஜாம்பவான்களாக உள்ள வீரர்கள் சிஎஸ்கேவில் உள்ளனர். அணியில் புதிதாக வரும் வீரர்களுக்கு அணியின் ஜாம்பவான்கள் சிறப்பாக உதவுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அணியில் விளையாடுவதே சிறப்பான அனுபவம். அந்த அளவில் அணியில் சிறப்பான சூழல் இருக்கும். அணியின் வீரர்களுக்குள்ளேயே சிறப்பான போட்டி காணப்படும் என்றும் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 15, 2020, 18:20 [IST]
Other articles published on Apr 15, 2020
English summary
CSK is a special IPL team with 'legends of world cricket': Murali Vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+