Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தா ரிலீஸ் செய்யும் ஸ்பின் பவுலர்.. கொக்கி போட்டு தூக்கும் சிஎஸ்கே.. பரபரக்கும் ஐபிஎல் களம்

சிட்னி: 2021 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி வெளியிடும் முக்கியமான ஸ்பின் பவுலர் ஒருவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்கும் என்று தகவல்கள் வருகிறது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த ஐபிஎல் தொடருக்கான டிரேடிங் விண்டோ ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. அதன்படி ஜனவரி 21ம் தேதி வரை இந்த டிரேடிங் விண்டோ திறந்து இருக்கும்.

டிரேடிங் விண்டோ

டிரேடிங் விண்டோ

இந்த டிரேடிங் விண்டோ மூலம் ஒரு அணி தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை வெளியிட முடியும். பிற அணி வெளியிடும் வீரர்களை எடுக்க முடியும். அதே போல அணிகளுக்கு இடையே ஒப்பந்தம் போல பேச்சுவார்த்தை நடத்தி வீரர்களை மாற்றிக்கொள்ள முடியும்.

நிலைமை

நிலைமை

இந்த டிரேடிங் விண்டோ மூலம் 2021 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி வெளியிடும் முக்கியமான ஸ்பின் பவுலர் ஒருவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்கும் என்று தகவல்கள் வருகிறது. சிஎஸ்கே அணியில் இருக்கும் ஸ்பின் பவுலர்கள் ஹர்பஜன், தாஹிர் , பியூஸ் சாவ்லா மூன்று பேருமே வரும் சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஆட மாட்டார்கள்.

ஆட மாட்டார்கள்

ஆட மாட்டார்கள்

இப்படிப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணிக்கு கூடுதல் ஸ்பின் பவுலர்கள் தேவை. அதில் ஒரு கட்டமாக சிஎஸ்கே அணி கொல்கத்தாவின் குல்தீப் யாதவை ஏலம் எடுக்கும் என்கிறார்கள். குல்தீப் யாதவ் 2021 ஐபிஎல் தொடரில் சரியாக ஆடவில்லை. கொல்கத்தா அணி இவருக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை.

மோசமான பார்ம்

மோசமான பார்ம்

இவருக்கும் தோனிக்கும் மைதானத்தில் நல்ல கெமிஸ்டிரி இருக்கும். இதன் காரணமாக டிரேடிங் விண்டோ மூலம் குல்தீப் யாதவ் சிஎஸ்கே அணிக்கு மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் வெளிநாட்டு ஸ்பின் பவுலர்கள் சிலரையும் சிஎஸ்கே புதிதாக ஏலம் எடுக்கும் என்கிறார்கள்.

Story first published: Wednesday, January 6, 2021, 11:31 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+