For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆரஞ்ச், பர்பிள் கேப் வேண்டாம்.... ஐபிஎல் கோப்பை போதும்... மஞ்சள் கேப் அணியின் இலக்கு!

ஐபிஎல் பைனல்ஸில் ஹைதராபாத்துக்கு எதிராக களமிறங்குகிறது சிஎஸ்கே. மிகவும் வலுவான பேட்டிங் வரிசை கொண்ட சிஎஸ்கே, ஹைதராபாத் பவுலிங்கை சமாளிக்குமா.

Recommended Video

ஆரஞ்ச், பர்பிள் கேப் வேண்டாம்.... கோப்பை போதும்... மஞ்சள் கேப் அணியின் இலக்கு!

சென்னை: ஐபிஎல் சீசன் 11ன் பைன்ல்ஸ் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு பவுலிங் ஸ்டிராங் என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் மிகவும் வலுவான அணியாக உள்ளது.

இரண்டாண்டுகள் தடைக்குப் பின் திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு ஐபிஎல்லில் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே பைனல்ஸ் நுழைந்துள்ளது.

கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே இந்த சீசனையும் சேர்த்து, ஒன்பது சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இது வேறெந்த அணிக்கும் இல்லாத சிறப்பாகும்.

அதேபோல் தற்போது 7வது முறையாக பைனல்ஸ் நுழைந்துள்ளது. இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. மும்பை மட்டுமே மூன்று கோப்பையை வென்றுள்ளது.

பேட்டிங் ஸ்டிராங்

பேட்டிங் ஸ்டிராங்

சிஎஸ்கேவை பொருத்தவரை, எந்த நிலையில் உள்ள வீரரும் அடித்து ஆடக் கூடியவர்களாக இருப்பது பலமாகும். இந்த சீசனில் சிஎஸ்கேவின் ராயுடு, ஷேன் வாட்சன் உள்பட நான்கு பேர் மட்டுமே சதம் அடித்துள்ளனர். இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் அடிக்கப்பட்ட நான்கு சதங்களில் மூன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டதாகும்.

ராயுடு, தோனி டாப்

ராயுடு, தோனி டாப்

ஹைதராபாத் அணியில் வில்லியம்சன், தவான் மட்டுமே 400க்கு மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ளனர். அதே நேரத்தில் சிஎஸ்கேவில் நான்கு பேர் 400க்கு மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ளனர். ராயுடு ஒரு சதத்துடன் 586 ரன்கள், தோனி 455 ரன்கள், ஷேன் வாட்சன் ஒரு சதத்துடன் 438 ரன்கள், சுரேஷ் ரெய்னா 413 ரன்கள் எடுத்துள்ளனர்.

ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்

இந்த சீசனில் சிஎஸ்கே அணி, மும்பையிடம் 1 விக்கெட்டில் வெற்றி, கொல்கத்தாவிடம் 5 விக்கெட்டில் வெற்றி, பஞ்சாபிடம் 4 ரன்களில் தோல்வி, ராஜஸ்தானிடம் 64 ரன்களில் வெற்றி, ஹைதராபாத்திடம் 4 ரன்களில் வெற்றி, பெங்களூரிடம் 5 விக்கெட்டில் வெற்றி, மும்பையிடம் 8 விக்கெட்டில் தோல்வி, டெல்லியிடம் 13 ரன்களில் வெற்றி, கொல்கத்தாவிடம் 6 விக்கெட்டில் தோல்வி, பெங்களூரிடம் 6 விக்கெட்டில் வெற்றி, ராஜஸ்தானிடம் 4 விக்கெட்டில் தோல்வி, ஹைதராபாத்திடம் 8 விக்கெட்டில் வெற்றி, டெல்லியிடம் 34 ரன்களில் தோல்வி, பஞ்சாபிடம் 5 விக்கெட்டில் வெற்றி, பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத்திடம் 2 விக்கெட்டில் வெற்றி பெற்றுள்ளது.

சிஎஸ்கேவின் பலம்

சிஎஸ்கேவின் பலம்

இந்த சீசனில் அதிரடியான, திரில் வெற்றிகளைப் பெற்று, பலருக்கும் ஹார்ட் அட்டாக் வரவழைத்தது சிஎஸ்கே. பவுலிங்கில் இம்ரான் தாஹிர், ஷர்துல் தாகுல், ஹர்பஜன், ஜடேஜா, பிராவோ, லுங்கி நிகிடி ஆகியோரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாகவே செய்து வருகின்றனர். ஆரஞ்ச் கேப், பர்பிள் கேப் வெல்வதற்கான வாய்ப்பு சிஎஸ்கே வீரர்கள் யாருக்கும் இல்லை. ஆனாலும் கோப்பையை வெல்லும் அணியாக சிஎஸ்கே உள்ளது.

Story first published: Saturday, May 26, 2018, 18:47 [IST]
Other articles published on May 26, 2018
English summary
CSK looking to win the ipl cup for the third time. Their batting is very strong.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X