Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘டாஸ் தோற்றது நமக்கு அடிச்ச லக்’ - வீரர்களுக்கு தோனி சைலண்ட் சிக்னல்.. முதல் ஓவரிலேயே செம ரிசல்ட்

அபுதாபி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் தோற்றாலும், முதல் ஓவரிலேயே முக்கிய விக்கெட்டை தட்டித் தூக்கியுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.26) டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

இதில், பிற்பகல் மூன்றரை மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

 சிஎஸ்கே vs கேகேஆர்

சிஎஸ்கே vs கேகேஆர்

இத்தொடரில் மிக வலிமையான அணியாக வலம் வரும் சென்னையும், அமீரகத்தில் இரண்டாம் கட்ட தொடர் தொடங்கியதில் இருந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை, பெங்களூரு அணிகளை பஞ்சராக்கிய கொல்கத்தா அணியும் மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னனை அணியும் முதல் போட்டியில் மும்பையையும், இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணியையும் வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

 200 ப்ளஸ் டார்கெட்

200 ப்ளஸ் டார்கெட்

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே சமயம், சென்னை அணியில் காயம் காரணமாக பிராவோவுக்கு பதிலாக சாம் கர்ரன் சேர்க்கப்பட்டுள்ளார். போட்டி அபுதாபியில் நடைபெறும் நிலையில், அதுவும் நல்ல உச்சி வெயிலில் நடைபெறுவதால், பிட்ச் பேட்டிங்கிற்கு சப்போர்ட் செய்யும் என்பதால் தான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். எப்படியும் இந்த ட்ரை பிட்சில் நன்றாக விளையாடினால் 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். கொல்கத்தா அதைத் தான் டார்கெட் செய்கிறது. அதனால் தான் டாஸ் வென்றதும் சற்றும் யோசிக்காமல் சென்னை அணியை ஃபீல்டிங் செய்ய வைத்தார் மோர்கன்.

 பிட்ச் கணிக்கலாம்

பிட்ச் கணிக்கலாம்

ஆனால், டாஸ் தோற்றது ஒருவகையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நல்லது என்பதே எக்ஸ்பெர்ட்ஸ்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில், இந்த பிட்சில் தான் கடந்த இருமுறையும் கொல்கத்தா அணி விளையாடியது. அவர்களுக்கு இந்த பிட்சை நன்றாகவே ரீட் செய்து வைத்திருக்கின்றனர். அதேசமயம், இந்த இரண்டாவது லீக்கில் சென்னை இதுவரை அபுதாபியில் விளையாடவில்லை. ஸோ, டாஸ் தோற்று கொல்கத்தா பேட்டிங் செய்வதால், சென்னை அணி 20 ஓவர்கள் முழுமையாக பந்து வீசும் இந்த கேப்பில், பிட்ச் குறித்து வீரர்கள் முழுமையாக கணித்துவிட முடியும் என்பதால், பேட்டிங்கில் அதற்கேற்ப விளையாட முடியும் என்று கூறுகின்றனர்.

 முதல் விக்கெட்

முதல் விக்கெட்

ஸோ, கொல்கத்தா எவ்வளவு ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பவுலிங் செய்யும் நேரத்தில் பிட்சை முழுமையாக கணித்துவிட முடியும் என்பதால், அவர்களால் நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை பேட்டிங்கை தேர்வு செய்திருந்தால், பிட்ச் குறித்த புரிதலின்றி சென்னை பேட்ஸ்மேன்கள் தடுமாறியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். டாஸ் தோற்ற பிறகு, தோனி நிச்சயம் இந்த பாயிண்ட்களைத் தான் வீரர்களிடம் ஷேர் செய்து மோட்டிவேட் செய்திருப்பார் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில், கொல்கத்தா அணியில் முதல் ஓவரிலேயே ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்துள்ளது. தவறான புரிதல் காரணமாக கில் 9 ரன்களில் அம்பதி ராயுடுவால் ரன் அவுட் செய்யப்பட்டார். பிறகு, வெங்கடேஷ் ஐயர் 18 ரன்களில் தாகூர் ஓவரில் கேட்ச்சாகியுள்ளார்.

Story first published: Sunday, September 26, 2021, 21:41 [IST]
Other articles published on Sep 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+