ஐபிஎல் கோப்பையை கோவிலில் பூஜை செய்த சிஎஸ்கே.. பாஸ் அப்படியே சர்ச், மசூதிக்கும் கொண்டு போவீங்களா?
சென்னை: சென்னை அணி ஐபிஎல் கோப்பை வென்றதை அடுத்து இன்று சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஐபிஎல் கோப்பையை கோவிலுக்கு எடுத்து சென்று அணி நிர்வாகம் பூஜை செய்துள்ளது.
சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அதிரடியாக வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுத்தது.
சென்னை எளிதாக இலக்கை அடைந்து வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து நேற்று சிஎஸ்கே வீரர்கள் இந்த வெற்றியை சென்னையில் கொண்டாடினார்கள்.

சென்னையில் கொண்டாட்டம்
இந்த நிலையில் நேற்று சென்னை அணி வீரர்கள் எல்லோரும் சிஎஸ்கே வெற்றியை கொண்டாட சென்னை வந்தனர். சென்னையில் தனியார் மாளிகையில் பெரிய அளவில் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வில் சென்னை வீரர்கள் எல்லோரும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் எல்லோரும் கலந்து கொண்டனர்.

கோப்பை வைத்து பூஜை
இந்த நிலையில் நேற்று கோப்பையை சென்னை கொண்டு வந்து பூஜை செய்துள்ளனர். சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் கோப்பையை கொண்டு சென்று பூஜை செய்து இருக்கிறார்கள். கோப்பைக்கு மாலை இட்டு சாமி முன்பு காட்டி, சிறப்பு பூஜை செய்துள்ளனர்.

வைரல்
இதை வைத்து பலர் மீம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.கோப்பைக்கு பூஜை செய்யும் புகைப்படம் வைரலாகி உள்ளது. காலையில் இருந்து பல வகையாக இதை கலாய்த்து இருக்கிறார்கள்.

சிலர் கேள்வி
இதை வைத்து சிலர் கிண்டலாக கேள்வியும் கேட்டுள்ளனர். அது என்ன கோவிலுக்கு மட்டும் கொண்டு போய் பூசை பண்ணனும். பெசன்ட் நகர் சர்ச்சுக்கும், நாகூர் தர்காவுக்கும் கோப்பையைக் கொண்டு போவார்களா என்று சிலர் கேட்டு இருக்கிறார்கள். .


Click it and Unblock the Notifications