
நீக்கம்
கடந்த வருட ஐபிஎல் சீசனில் சரியாக ஆடாத வீரர்களை ஐபிஎல் அணிகள் நீக்கி உள்ளது. முக்கியமாக பெங்களூர் அணியில் இருந்து 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட பல முக்கியமான வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதோடு பவுலர்கள் சிலரும் நீக்கப்பட்டுள்ளனர்.

உமேஷ் யாதவ்
பெங்களூர் அணியில் கடந்த சில வருடங்களாக விளையாடிய வீரர் உமேஷ் யாதவ். இவர் கடந்த சீசனில் சரியாக ஆடவில்லை. சில போட்டிகளில் பெங்களூர் அணியின் தோல்விக்கும் உமேஷ் யாதவ் காரணமாக இருந்தார்.

மாற்றம்
இந்த நிலையில் உமேஷ் யாதவ் பெங்களூர் அணியால் இந்த வருடம் ரிலீஸ் செய்யப்பட்டார். அவரை அணியில் வைத்திருக்க விருப்பம் இன்றி பெங்களூர் அணி அவரை ரிலீஸ் செய்தது. இந்த நிலையில் உமேஷ் யாதவை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஏலம் வாய்ப்பு
சிஎஸ்கே அணியை இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பின்தொடர தொடங்கி உள்ளார். பெங்களூர் அணியை இன்ஸ்டாகிராமில் இவர் அன்பாலோ செய்துள்ளார். இந்த நிலையில் சிஎஸ்கேவை இவர் திடீரென பின்தொடர்வதால் சிஎஸ்கே அணியால் இவர் ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஏலம்
இவர் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்டுவிட்டதால் இப்போது இவரை டிரேடிங் செய்ய முடியாது. இதனால் சிஎஸ்கே அணி இவரை ஏலத்தின் போது எடுக்க முயலும். ஆனால் இவரை அணியில் எடுக்க வேண்டாம். அது மோசமான முடிவாக இருக்கும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இவரை எல்லாம் வைத்துக்கொண்டு கப் ஜெயிக்க முடியாது என்று கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications