Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர்தான் சிஎஸ்கே அணியின் புதிய ஓப்பனர்.. பெரிய கையை இறக்கும் பிளமிங்.. அசர வைத்த அப்டேட்!

சிட்னி: நியூசிலாந்து அணியில் ஓப்பனிங் வீரராக இறங்கி ஆடி வரும் இளம் வீரர் திம் செய்பர்ட்தான் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரராக அடுத்த வருடம் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

2020 ஐபிஎல் தொடர் இப்போதுதான் நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் மிகவும் வலிமையான அணியாக இருந்த மும்பை அணி இதில் வெற்றிபெற்றது.

முதல்முறையாக சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆப் செல்லவில்லை. பல வீரர்கள் பார்ம் அவுட் காரணமாக கஷ்டப்பட்டதால் சிஎஸ்கே அணியால் பிளே ஆப் செல்ல முடியவில்லை.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு பின் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரர் வாட்சன் ஓய்வு பெற்றார். ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் வாட்சன் ஓய்வு பெற்றார். இதனால் சிஎஸ்கே அணி வாட்சனுக்கு மாற்றாக வேறு ஒரு வீரரை ஏலம் எடுக்க வேண்டும்.

ஏலம்

ஏலம்

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விரைவில் நடக்க உள்ளது. இந்த ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் இப்போதே தயார் ஆக தொடங்கிவிட்டது. ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. பெரிய அளவில் இந்த தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஓப்பன்

ஓப்பன்

இந்த நியூசிலாந்து அணியில் ஓப்பனிங் வீரராக இறங்கி ஆடி வரும் இளம் வீரர் திம் செய்பர்ட்தான் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரராக அடுத்த வருடம் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து அணியில் இவர் ஓப்பனிங் இறங்கி ஆடி வருகிறார்.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி 20 போட்டியில் இவர் மிகவும் அதிரடியாக ஆடி மூன்று போட்டியிலும் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.சராசரியாக ஒரு போட்டிக்கு 80+ ரன்களை இவர் ஒரு போட்டியில் எடுத்து அசத்தி உள்ளார். அதிலும் இவரின் ஸ்டிரைக் ரேட் 135க்கும் அதிகமாக இருந்தது.

 பிளமிங்

பிளமிங்

சிபிஎல் தொடரிலும் இவர் சிறப்பாக ஆடினார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இவர் மாற்று வீரராக களமிறங்கினாலும், அணிக்குள் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த வருடம் இவரை அணியில் எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்யும் என்று பிளமிங் கூறியுள்ளார்.

பேட்டி

பேட்டி

பாகிஸ்தான் நியூசிலாந்து இடையிலான போட்டியின் போது பிளமிங் வர்ணனை செய்தார். இந்த வர்ணனையில் திம் செய்பர்டை ஏலம் எடுக்க சிஎஸ்கே அணி முயற்சி செய்யும். கொல்கத்தா அணி இதற்கான முயற்சியை செய்தாலும், சிஎஸ்கே அணியும் இவரை முயற்சி செய்யும் என்று பிளமிங் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 23, 2020, 13:12 [IST]
Other articles published on Dec 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+