Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் திட்டம் எல்லாம் போச்சு.. எதிர்பாராத முடிவை எடுத்த கங்குலி.. அப்ப அடுத்த வருஷமும் கனவு தானா?

டெல்லி: 2021ல் நடக்க உள்ள ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே கேப்டன் தோனி போட்டு வைத்து இருந்த முக்கியமான திட்டம் பெரிய அளவில் காலியாகி உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் இப்போதுதான் நடந்து முடிந்துள்ளது. இதற்கான ஏலம் விரைவில் நடக்க உள்ளது. இந்த ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் இப்போதே தயார் ஆக தொடங்கிவிட்டது.

அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் இப்போதே நடந்து வருகிறது. பெரிய அளவில் இந்த தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எப்போது

எப்போது

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஏலம் நடக்க உள்ளது. இந்த ஏலம் பெரிய அளவில் நடக்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு புதிய அணிகள் இணைக்கப்படும் என்று கூறப்பட்டது.

கலைப்பு

கலைப்பு

இதனால் மொத்தமாக இருக்கும் அணிகள் எல்லாம் கலைக்கப்பட்டு பெரிய அளவில் ஏலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் சிஎஸ்கே அணி வலுவான வீரர்களை ஏலம் எடுக்க திட்டமிட்டு இருந்தது. சிஎஸ்கே அணியில் வாட்சன் ஓய்வு பெற்றுவிட்டார்.

ஹர்பஜன்

ஹர்பஜன்

ஹர்பஜன், ரெய்னா குறித்து இன்னும் முடிவு வெளியாகவில்லை. கேதார் ஜாதவ், சாவ்லா போன்றவர்கள் மோசமான பார்மில் உள்ளனர்.இதனால் சிஎஸ்கே அணி இந்த ஏலத்தை பயன்படுத்தி புதிய வீரர்களை அணிக்குள் எடுக்க திட்டமிட்டு இருந்தது. பெரிய ஏலம் நடந்தால் நல்ல வீரர்களை அணியில் எடுக்கலாம் என்று சிஎஸ்கே நினைத்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் சிஎஸ்கே அணி கொஞ்சம் கூட நினைத்து பார்க்காத வகையில் தற்போது பெரிய ஏலம் நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் அடுத்த வருடம் ஐபிஎல்லில் புதிய அணிகள் இணைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 புதிய அணிகள் 2022ல்தான் இணைக்கப்படும்.

மோசம்

மோசம்

பிசிசிஐ தலைவர் கங்குலி எடுத்த முடிவு இது என்கிறார்கள். இதனால் பெரிய அளவில் ஏலம் எடுக்க முடியாது. சிஎஸ்கே அணி இதனால் 2021லும் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய முடியாது. வாட்சன் போன்ற ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மட்டுமே சிஎஸ்கே மாற்று வீரர்களை பெற முடியும் என்கிறார்கள்.

Story first published: Tuesday, December 22, 2020, 19:01 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+