Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து ஸ்பின்னர்.. தலைமை சிஒஇ சொன்ன கருத்து

சென்னை: சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் காரெத் பேட்டி இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.49 வயதான காரெத் பேட்டி, வொர்செஸ்டர்ஷையர் அணியில் விளையாடிய காலத்திலிருந்தே சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளரான ஜாகீர் கானுடன் நல்ல நட்புறவைக் கொண்டுள்ளார்.

இது குறித்து பேசிய சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், "நாங்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன, இன்னும் சில நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Gareth Batty

இங்கிலாந்து அணிக்காக 9 டெஸ்ட், 10 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடியுள்ள காரெத் பேட்டி, தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவரது வழிகாட்டுதலின் கீழ் சர்ரே அணி தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதுடன், கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

IND vs NZ: 2 போட்டியில் 99 ரன்கள் விட்டு கொடுத்த புவனேஸ்வர் குமார்.. மோர்னே மோர்கல் வார்னிங்

IND vs NZ: 2 போட்டியில் 99 ரன்கள் விட்டு கொடுத்த புவனேஸ்வர் குமார்.. மோர்னே மோர்கல் வார்னிங்

இவரது பயிற்சியின் கீழ் கஸ் அட்கின்சன், வில் ஜேக்ஸ், ஆலி போப் மற்றும் ஜேமி ஸ்மித் உள்ளிட்ட பல வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பை பெற்றனர். கடந்த 2023-ஆம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றதற்கு பிறகு, சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் சவால்களை எதிர்கொண்டுள்ளது. 2025 சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததை தொடர்ந்து, அணி நிர்வாகம் தனது அணுகுமுறையை மாற்ற முடிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், சிஎஸ்கே அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 16 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்து 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ஸ்டீபன் பிளெமிங்கிற்கு பதிலாக இவர் பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கம்.. ரஞ்சி போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி அசத்திய 33 வயது வீரர்

Also Read

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கம்.. ரஞ்சி போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி அசத்திய 33 வயது வீரர்

அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா பந்துவீச்சு பயிற்சியாளராக இணையவுள்ளார். தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கானின் பரிந்துரையின் பேரில் மோஹித் சர்மா நியமிக்கப்படுவதாக சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Story first published: Monday, October 26, 2026, 16:19 [IST]
Other articles published on Oct 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+