Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் இவர்தான்.. ஜாகீர் கானைத் தொடர்ந்து உள்ளே வந்த மோஹித்

சென்னை: 2027 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளார். புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ஜாகீர் கானின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

நீண்ட காலமாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியும் ஆஸ்திரேலிய தேசிய அணிக்கு திரும்பியதால், சென்னை அணியின் பயிற்சியாளர் குழு முற்றிலுமாக மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.

CSK Mohit Sharma Appointed as CSK Bowling Coach for IPL 2027 Under Head Coach Zaheer Khan

இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்ற 38 வயதான வேகப் பந்துவீச்சாளர் மோஹித் சர்மாவை பந்துவீச்சு பயிற்சியாளராக கொண்டு வர சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நீண்ட காலமாக பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டு வரும் எரிக் சைமன்ஸ் இடத்தில் இவர் செயல்படுவாரா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஹரியானாவைச் சேர்ந்த மோஹித் சர்மா, இந்திய அணிக்காக விளையாடிய 34 சர்வதேச போட்டிகளில் 20 போட்டிகள் தோனியின் தலைமையில் ஆடியுள்ளார். குறிப்பாக 2015 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கலக்கினார்.

ஐபிஎல் அரங்கில் மோஹித் சர்மாவின் திறமையை உலகிற்கு அடையாளம் காட்டியதே சிஎஸ்கே அணிதான். 2013 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான அவர், 3 சீசன்களில் அபாரமாக பந்துவீசி 57 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். பின்னர் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். குறிப்பாக 2023 சீசனில் குஜராத் அணிக்காக 27 விக்கெட்டுகளை குவித்து தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆச்சரியப்படுத்தினார்.

ஒரு மேட்ச் கூட நடக்கலை.. இந்தியா, பாகிஸ்தான் உட்பட செமி பைனல் போன 4 அணிகள்.. ரத்தான காலிறுதி

ஒரு மேட்ச் கூட நடக்கலை.. இந்தியா, பாகிஸ்தான் உட்பட செமி பைனல் போன 4 அணிகள்.. ரத்தான காலிறுதி

சிஎஸ்கே-வுக்கு என்ன பலம்?

அசுர வேகம் இல்லாவிட்டாலும், நக்கிள் பால், ஸ்லோவர் யார்க்கர், பந்தின் வேகத்தை மாற்றி வீசுவது போன்ற சாதுரியமான நுணுக்கங்களில் மோஹித் சர்மா கைதேர்ந்தவர். ஜாகீர் கான் மற்றும் மோஹித் சர்மா ஆகிய இருபெரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் கூட்டணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்களை டெத் ஓவர்களில் மிகச் சிறந்த முறையில் வழிநடத்த உதவும் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் இந்த அறிவிப்பை உற்சாகத்துடன் பார்க்கின்றனர்.

Story first published: Tuesday, September 29, 2026, 15:51 [IST]
Other articles published on Sep 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+