Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது அட்டாக் பண்ற சிங்கம்.. 23 பந்துகளில் அரைசதம்.. சிக்சர்களாக விளாசும் ருதுராஜ் கெய்க்வாட்!

அகமதாபாத்: சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 23 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டலாக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் 2023ஆம் ஆண்டில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே, குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து வருகிறது.

CSK Opener Ruturaj Gaikwad scored 23 ball fifty against Gujarat in the Opening Match of IPl 2023

இதனையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர். தொடர்ந்து குஜராத் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி வீசிய பந்தில் டெவன் கான்வே 1 ரன்னில் போல்டாகி வெளியேறினார்.

இதனையடுத்து களம் புகுந்த மொயின் அலி ருதுராஜிற்கு கம்பெனி கொடுக்க, சிக்சரும் பவுண்டரியுமாய் வெளுத்து வாங்கினார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஜோஷ் லிட்டில் பந்தில் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். இதன் காரணமாக லிட்டிலை பந்துவீசுவதில் இருந்து சிறிது நேரம் விலக்கி வைக்க நேர்ந்தது. அதேபோல் தேவைக்கு முன்னதாகவே ரஷீத் கானை குஜராத் அணி அட்டாக்கில் கொண்டு வந்தது.

CSK Opener Ruturaj Gaikwad scored 23 ball fifty against Gujarat in the Opening Match of IPl 2023

அதற்கு பலனாக மொயின் அலி 23 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ரூ.16 கோடிக்கும் அதிகமாக ஏலத்தில் கொடுத்து வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களில் நடையை கட்ட சென்னை அணி 7 ஓவர்களில் 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன் பின்னர் வந்த ராயுடு நிதானம் காட்ட, மறுபக்கம் நின்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் ருத்ர தாண்டவத்தை நிகழ்த்தினார். அல்ஜாரி ஜோசப் வீசிய 9வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை பறக்கவிட்ட ருதுராஜ் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

வழக்கமாக எம்ஜிஆர் போல் முதல் மூன்று போட்டிகளில் அடக்கி வாசிக்கும் ருதுராஜ் கெய்க்வாட், இந்தத் தொடரில் முதல் போட்டியிலேயே மிடில் பேட்டில் விளாசி தள்ளுகிறார். இதனால் மைதானம் முழுவதும் நிரம்பியுள்ள சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இவரை கட்டுப்படுத்த முடியாமல் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.

36 பந்துகளுக்கு 75 ரன்கள் குவித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட், இதுவரை 8 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசியுள்ளார். அதேபோல் 12 அரைசதங்கள் விளாசியதன் மூலம், 37 ஐபிஎல் போட்டிகளில் அதிக அரைசதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் ஜாம்பவான் வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் லெண்டல் சிம்மன்ஸ் ஆகியோரின் சாதனைகளையும் சமன் செய்துள்ளார். 37 ஐபிஎல் போட்டிகளில் 14 அரைசதங்கள் விளாசி ஆஸி. வீரர் ஷான் மார்ஷ் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 31, 2023, 20:45 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+