For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த 2 மும்பை வீரர்கள் போதும்.. சிஎஸ்கே கதை கந்தலாயிடும்.. முதல் மேட்ச்சிலேயே தோனிக்கு பெரிய சவால்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த முதல் போட்டியிலேயே ஏற்கனவே தன் சொந்த அணி வீரர்கள் விஷயத்தில் அடி மேல் அடி வாங்கி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் பெரிய சவாலை எதிர்கொள்ள உள்ளது.

கேப்டன் தோனி, மும்பையின் துல்லிய பந்துவீச்சாளர்கள் இருவரை சமாளிக்கும் திறன் கொண்ட துவக்க வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ரெய்னா வேண்டாம்.. அந்த வீரரை வைத்து சமாளிச்சுக்கலாம்.. கழட்டி விட்ட தோனி.. சிஎஸ்கே அதிரடி திட்டம்!ரெய்னா வேண்டாம்.. அந்த வீரரை வைத்து சமாளிச்சுக்கலாம்.. கழட்டி விட்ட தோனி.. சிஎஸ்கே அதிரடி திட்டம்!

சிஎஸ்கே அணி நிலை

சிஎஸ்கே அணி நிலை

சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் என இரண்டு அனுபவ வீரர்களை இழந்து தவித்து வருகிறது. ருதுராஜ் கெயிக்வாட் என்ற இளம் வீரர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் அணியில் அவரை தேர்வு செய செய்ய முடியாத நிலை உள்ளது.

கிரிக்கெட் போட்டிகள் ஆடவில்லை

கிரிக்கெட் போட்டிகள் ஆடவில்லை

தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் பலர் கடந்த ஓராண்டாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தோனி, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், முரளி விஜய் ஆகியோர் அதில் அடக்கம். மேலும், அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி தாமதமாக பயிற்சி செய்யத் துவங்கியது.

தோனியை நம்பி..

தோனியை நம்பி..

அந்த அணியின் நிலைமை மோசமாக உள்ள நிலையில், கேப்டன் தோனியை நம்பியே சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் களம் காண்கிறது. ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோரின் இழப்பை எப்படி ஈடுகட்டுவது என தோனி திட்டமிட்டு வருகிறார்.

துவக்க வீரர்கள்

துவக்க வீரர்கள்

இதன் இடையே அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சனுடன் யாரை களமிறக்க உள்ளார் தோனி என்பது விவாதப் பொருளாக மாறி உள்ளது. பாப் டுபிளெசிஸ் அல்லது முரளி விஜய் - இருவரில் ஒருவர் துவக்க வீரராக களமிறங்கக் கூடும். முதல் போட்டியில் துவக்க வீரர்கள் தான் முக்கிய பங்காற்ற இருக்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ஆம், மும்பை இந்தியன்ஸ் உடனான முதல் ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணி கடும் சவாலை சந்திக்க உள்ளது. தொடரின் முதல் போட்டி என்பதால் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள்

இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, ட்ரென்ட் போல்ட் என இரண்டு துல்லியமான வேகப் பந்துவீச்சாளர்கள் பவர்பிளே ஓவர்களில் பந்து வீசுவார்கள். அவர்களை சமாளிப்பது கடினம். சிறிய தவறு செய்தாலும் ஸ்டம்புகள் பதம் பார்க்கப்படும்.

துவக்கம் கடினம்

துவக்கம் கடினம்

இது தான் சிஎஸ்கே அணிக்கு பெரும் சவாலாக அமையும். ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய் துவக்க வீரர்களாக களமிறங்கினால், அவர்கள் கடந்த ஓராண்டில் இத்தகைய தரமான, துல்லியமான வேகப் பந்துவீச்சை எதிர்கொண்ட அனுபவம் இல்லாததால் தடுமாற வாய்ப்பு உள்ளது.

கூடுதல் பொறுப்பு

கூடுதல் பொறுப்பு

துவக்கம் தடுமாறினால், தோனியை அதிகம் நம்பி இருக்கும் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் போட்டியை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்படும். சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா இல்லை எனபது குறிப்பிடத்தக்கது. எனவே, துவக்க வீரர்கலுக்கு இந்த சீசனில் கூடுதல் பொறுப்பு உள்ளது.

சுழற்பந்துவீச்சு தான் ஆயுதம்

சுழற்பந்துவீச்சு தான் ஆயுதம்

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை சுழற் பந்துவீச்சை தான் கேப்டன் தோனி ஆயுதமாக பயன்படுத்த உள்ளார். பேட்டிங்கில் சொதப்பினால், சுழற் பந்துவீச்சு தான் சிஎஸ்கே அணியை காப்பாற்ற வேண்டும். பியுஷ் சாவ்லா, ஜடேஜா, இம்ரான் தாஹிர் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை தோனி மும்பை அணிக்கு எதிராக பயன்படுத்தக் கூடும்.

Story first published: Wednesday, September 16, 2020, 15:29 [IST]
Other articles published on Sep 16, 2020
English summary
Chennai Super KIngs (CSK) Latest News Updates in Tamil : CSK opening could fall prey to Mumbai Indians bowlers Bumrah, Trent Boult in the season opener on September 19.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X