சென்னைக்கு வந்த உடன் தோனி என்ன செய்தார் தெரியுமா? சிஎஸ்கே உரிமையாளர் ஸ்ரீனிவாசன் சொன்ன உண்மை
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து அதன் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் சில பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.
சென்னைக்கும், தோனிக்குமான உறவு நாம் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. அவரே பல முறை, சென்னையை தனது 2வது தாய் வீடு என்று பலமுறை கூறி இருக்கிறார்.
சென்னை அணிக்காக விளையாடியதால் மட்டும் அவரால் எப்படி இவ்வளவு பாசம் வைக்க முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் வருவது இயற்கை தானே.

தோனியை காணவில்லை
இது குறித்து, விளையாட்டு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட ஸ்ரீனிவாசனிடம் கேள்வி எழுப்பபட்டது. சென்னைக்கு தோனி முதல்லி வந்த உடன் , அவர் உன்னிடம் பைக் தான் கேட்டார். சரி என்று அவருக்கு ஓரு பைக் ஏற்பாடு செய்து கொடுத்தோம். அவ்வளவு தான், அடுத்த நிமிடம் அவரை காணவில்லை. தோனிக்கு பைக் என்றால் அவ்வளவு பிரியம்.

சென்னை மீதான காதல்
பைக் மூலம் தோனி சென்னையில் எப்போதும் சற்றி கொண்டே இருப்பார். சென்னையின் அனைத்து முக்கிய பகுதிக்கும் தோனி தனது பைக் மூலம் பயணம் செய்து நேரத்தை செலவிட்டு இருக்கிறார். கிரிக்கெட்டை தாண்டி சென்னை மீது தோனிக்கு இருந்த காதலும், தோனி மீது சென்னைக்கு இருந்த காதலும், இப்படி தான் வளர்ந்து கொண்டே சென்றது.

உண்மை கதை
முக்கியமான போட்டிகளுக்கு முன்பு கூட தோனி பைக் ரைடு சென்று விடுவார் என்று ஸ்ரீனிவாசன் தனது பேட்டியில் கூறியுள்ளார். என்.ஸ்ரீனிவாசன் கூறியது அத்தனையும் உண்மையே. 2008ஆம் ஆண்டு தோனி ஒரு முறை சென்னையில் பைக் ரெய்டு சென்ற போது நடந்த சம்பவம் இது. தோனயின் வழக்கமான பயணத்தின் போது அவரது பைக் பழுதாகி பாதியில் நின்றது.

போலீஸ் ஜீப்பில் தோனி
அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தோனி நடுவழியில் நின்றார். அந்த சமயம், அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பைக்கில் இருப்பது தோனி என்று தெரிந்ததும், அவரை போலீசார் வாகனத்தில் பாதுகாப்போடு அழைத்து வந்து ஹோட்டலில் விட்டனர். அதன் பிறகு அவருடைய பைக்கும் சரி செய்யப்பட்டு போலீசாரே வந்து கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications