Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒருத்தரைத்தான் தேடிகிட்டு இருந்தோம்.. இளம் தமிழக வீரருக்கு போன் போட்ட சிஎஸ்கே.. செம திருப்பம்

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இளம் வீரர் ஒருவரை தேர்வு செய்ய அணி நிர்வாகம் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடர் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஏலத்திற்கு முன்பாக 8 ஐபிஎல் அணிகளும் வெளியேற்றும், தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது. இன்னும் பல அணிகளுக்கு இடையே தொடர்ந்து டிரேடிங் நடந்து வருகிறது.

இளம் வீரர்

இளம் வீரர்

தற்போது சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் குறைவாக இருக்கிறார்கள். அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதிலும் பிரச்சனை இருக்கிறது.இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி வரும் தொடரில் பெரிய அளவில் அணிக்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

திருத்தம்

திருத்தம்

சிஎஸ்கே அணிக்குள் இந்த சீசனில் பல இளம் வீரர்கள் கொண்டு வரப்படுவார்கள். இதற்காக சையது முஷ்டாக் கோப்பையில் ஆடி வரும் வீரர்களை அணி நிர்வாகம் குறி வைத்துள்ளது. சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக வீரர்கள் பலர் சிறப்பாக ஆடினார்கள்.

அழைப்பு

அழைப்பு

இந்த தொடரில் கலக்கிய ஷாருக்கான் போன்ற வீரர்களுக்கு ஏற்கனவே ராஜஸ்தான் அணியில் இருந்தும் கொல்கத்தா அணியில் இருந்தும் அழைப்பு சென்றுள்ளது. இந்த நிலையில் தமிழக அணியை சேர்ந்த இன்னொரு வீரருக்கு சிஎஸ்கே அழைப்பு விடுத்துள்ளது என்கிறார்கள். இவரின் விவரம் இன்னும் வெளியாகவில்லை.

அழைப்பு சென்றது

அழைப்பு சென்றது

பாபா அபராஜித் அல்லது மணிமாறன் சித்தார்த் இரண்டு பேரில் ஒருவருக்கு அழைப்பு சென்றதாக கூறப்படுகிறது. சிஎஸ்கேவில் இவர்களை டெஸ்ட் செய்ய கூப்பிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களில் யாருக்கு கால் சென்றது என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

தேடிகிட்டு இருந்தோம்

தேடிகிட்டு இருந்தோம்

ஆனால் இந்த வீரர் சிஎஸ்கே பல நாட்களாக தேடிக்கொண்டு இருந்த வீரர் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே பல நாட்களாக தேடிக்கொண்டு இருந்த திறமை இவரிடம் இருப்பதாகவும், இதன் காரணமாகவே சிஎஸ்கே இவரை குறி வைக்கிறதும் என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Thursday, February 4, 2021, 15:54 [IST]
Other articles published on Feb 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+