For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்து எறிந்தால் தானே மிஸ் ஆகும்.. ரஹானே செய்த புத்திகாலித்தனம்.. மோசமான ரன் அவுட்டில் சிக்கிய மார்ஷ்

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ரஹானே செய்த சாதூர்யமான காரியம் ஒன்று ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 167 ரன்களுக்கு எட்டு விக்கெட் எடுத்தது.

இதனை அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியில் டாப் வரிசை வீரர்கள் வீழ்த்தினாலே அந்த அணி தடுமாறும். இதனால் சிஎஸ்கே வீரர்கள் வார்னர் விக்கெட்டுக்கு குறிவைத்து காயை நகர்த்தினார்கள்.

CSK Player Rahane brilliant move to runout Mitchell marsh

இதற்கு ஏற்ற வகையில் வார்னர் டக் அவுட் ஆகியும், ஃபில் சால்ட் இரண்டு சிக்ஸர்கள் அடித்து 17 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து மிட்செல் மார்ஸ் களத்துக்கு வந்தார். தேஷ்பாண்டே வீசிய ஓவரை மனிஷ் பாண்டே எதிர்கொண்டார். அப்போது அவர் அடித்த பந்து ரகானே விடம் சென்றது. இதனை கவனிக்காமல் எதிர் திசையில் என்ற மிச்சில் மார்ஸ் பாதி தூரம் ஓடி வந்து விட்டார்.

இதனை அடுத்து ரகானே அவர்களை ரன் அவுட் செய்ய முயன்றார். பொதுவாக பந்தை பவுலர்களிடமோ அல்லது அங்கு நின்ற பில்டர்களிடமோ எறிவது வழக்கம். ஆனால் அப்படி செய்தால் பந்து எங்கே மிஸ் ஆகி ரன் அவுட் வாய்ப்பு போய்விடுமோ என நினைத்த ரகானே, நேராக ஓடிச்சென்று போய் ஸ்டெம்பை அடித்தார்.

இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத மிச்சல் மார்ஸ் அங்கே களத்தில் நின்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து மார்ஸ் பெவிலிய நோக்கி சென்றார். இதனால் டெல்லி அணி 25 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரகானே செய்த சாதுரியமான காரியம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நடப்பு தொடரில் அரங்கேறிய ரன் அவுட்களிலேயே இதுதான் சிறந்தது என்று கிரிக்கெட் வர்ணனையாளர் பங்வா தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, May 10, 2023, 22:41 [IST]
Other articles published on May 10, 2023
English summary
CSK Player Rahane brilliant move to runout Mitchell marsh பந்து எறிந்தால் தானே மிஸ் ஆகும்.. ரஹானே செய்த புத்திகாலித்தனம்.. மோசமான ரன் அவுட்டில் சிக்கிய மார்ஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+