Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ஷ்டத்தை கெட்டியாக பிடித்த ருதுராஜ்.. சரியான டைமில் வந்த அரைசதம்.. பவர்பிளேவில் தப்பித்த சிஎஸ்கே

சென்னை: ஐபிஎல் தொடரின் குவாலிஃபயர் முதல் போட்டியில் குஜராத அணிக்கு எதிரான சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் செய்ய வேண்டிய நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டதோடு, பெரிய இலக்கையும் நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

CSK Player Ruturaj Gaikwad scored his 4th Half Century in IPL 2023 against Gujarat in Qualifier 1

சென்னை அணி சார்பாக வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே இணை களமிறங்கியது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் நிதானம் காத்த நிலையில், 2வது ஓவரை வீசிய நலக்கண்டே பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் சென்னை ரசிகர்களுகு இன்ப அதிர்ச்சியாக அந்த பந்து நோ-பால் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் அடுத்த இரு பந்துகளில் சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி ருதுராஜ் பதிலடி கொடுத்தார்.

இதனிடையே 4 ஓவர்கள் கடந்தும் விக்கெட் எடுக்க முடியாததால், உடனடியாக ரஷித் கான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அப்போது சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை கொடுக்கவில்லை. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்திருந்தது. ஒருபக்கம் கான்வே நிதானம் காத்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் வெளுத்து வாங்க தொடங்கினார்.

இதனால் 36 பந்துகளில் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 4வது அரைசதத்தையும் பதிவு செய்தார். ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசிய போது, கான்வே வெறும் 17 ரன்களே சேர்த்திருந்தார். சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதத்திற்கு பின் அதிரடியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற நிலையில், 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Story first published: Tuesday, May 23, 2023, 20:37 [IST]
Other articles published on May 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+