For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL - சியர் லீடர்சை பதம் பார்த்த சிவம் துபே.. சும்மா உட்கார்ந்தவங்களுக்கு நேர்ந்த கதி.. இது ஓவர்!

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு காலத்தில் சியர் லீடர்சை பார்ப்பதற்காகவே போட்டியை பார்த்த மக்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக சியர் லீடர்ஸ் பயன்படுத்துவதை ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்தது.

இதற்கு காரணம் சியர் லீடர்ஸ் இடம் வீரர்கள் தவறாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பல பாலியல் தொந்தரவுகளும் சியர் லீடர்ஸ்க்கு நடப்பதாக புகார் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது சீசனில் மீண்டும் சியர் லீடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

CSK Player shivam dube remarkable six hits a cheer leader in chepauk

எனினும் அவர்கள் பெரும் அளவில் தொலைக்காட்சியில் இப்போது காட்டப்படுவதில்லை. மேலும் அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் தற்போது கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கேகேஆர் சிஎஸ்கே அணிகள் மோதிய ஆட்டத்தில் ஒரு ருசீகர சம்பவம் நடந்தது. சிஎஸ்கே வீரர்கள் ரன்களை அடிக்காமல் தடுமாறினர்.

அடுத்தடுத்த ஐந்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ஆறாவது விக்கெட் விழ நேரம் ஆனது. இதனால் சியர் லீடர்சும் கடுப்பாகி ஓரமாக போய் உட்கார்ந்து இருந்தனர். அப்போது சிவம் துபே பளார் என்று ஒரு சிக்ஸ் ஐ அடித்தார். அது நேராக சியர் லீடர்ஸ் மீது பட்டது. பந்து வருகிறது என தெரிந்து சிலர் ஓடிய நிலையில், அங்கு அமர்ந்திருந்த சியர் லீடர் ஒருவர் மீது பந்து தாக்கியது.

எனினும் நல்ல வேலையாக அந்த பெண்ணுக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அந்த பெண் கையை வைத்து பந்து பட்ட இடத்தை தடவிக் கொண்டிருந்தார். இந்த சம்பவம் மைதானத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த காட்சியை பார்த்த கிரிக்கெட் வர்ணனையாளர்களும் சிவம் துபேவையும் , சியர் லீடர்சையும் கிண்டல் செய்தார்கள்.

Story first published: Sunday, May 14, 2023, 23:00 [IST]
Other articles published on May 14, 2023
English summary
CSK Player shivam dube remarkable six hits a cheer leader in chepauk IPL - சியர் லீடர்சை பதம் பார்த்த சிவம் துபே.. சும்மா உட்கார்ந்தவங்களுக்கு நேர்ந்த கதி.. இது ஓவர்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+