Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ட்ரீட் கிரிக்கெட் ரேஞ்சுக்கு.. தான் அடித்த பந்துகளை தானே தேடி எடுத்துவந்த தோனி - வீடியோ

அமீரகம்: தான் அடித்து மைதானத்துக்கு வெளியே சென்ற பந்துகளை தோனி சென்று தேடி எடுத்து வரும் வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 2ம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் அங்கு நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான் மோதுகின்றன.

 சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இந்தத் தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது. இந்நிலையில், தொடரின் 2ம் பாதி தொடங்கவுள்ள நிலையில் இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணிகளுமே அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பி உள்ளன. அங்கு கடந்த 13-ம் தேதி முதல் குவாரண்டைனில் இருந்த வீரர்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளில் நெகட்டிவ் என்ற முடிவை பெற்றுள்ளனர்.

 சென்னை vs மும்பை

சென்னை vs மும்பை

இதற்கிடையே, எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் என அனைவருமே கடந்த ஆக.20ம் தேதி முதல் தங்களது முதல்கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்த பயிற்சி முகாம் தொடங்கியது நடைபெற்று வருகிறது. அதேபோல், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் பயிற்சியை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தொடங்கியுள்ளனர். அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 சென்று தேடிய தோனி

சென்று தேடிய தோனி

இந்நிலையில், சென்னை சூப்பர் அணியினர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில், சுவாரஸ்யம் என்னவெனில், பயிற்சியின் போது தோனி பல சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் அடித்த ஒவ்வொரு பந்துகளும் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் பறந்தன. ஏறக்குறைய அவர் சுழற்றிய அனைத்து பந்துகளும் மைதானத்துக்கு வெளியே பறந்தன. அப்படி அவர் அடித்த பந்துகள் மைதானத்துக்கு அருகே இருந்த பூங்காவில் சென்று மரங்களுக்கு இடையே விழுந்தன. இதனால், தோனியே நேரடியாக சென்று பந்துகளை தேடிக் கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டார். நாம் வயல் வெளிகளில் விளையாடும் போது, பந்தை தூக்கி அடித்து தேடிக் கொண்டிருப்பது போன்று, தோனி தான் அடித்த பந்துகளை மற்ற வீரர்களுடன் சேர்ந்து தேடியது பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. கையில் பேட் ஒன்றை வைத்துக் கொண்டு, அவர் மரம், செடிகளுக்கு நடுவே பந்துகளை தேடியது ரசிக்கும் வகையில் இருந்தது.

அக்டோபர் 15

ஐபிஎல் இறுதிப் போட்டிகள் அக்டோபர் 15ல் நடைபெறும். இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் நாளில் முதல் போட்டி மாலை பிற்பகல் 3:30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7:30 மணிக்கும் தொடங்கும். 31 போட்டிகளில் பெரும்பாலானவை துபாயில் (13), ஷார்ஜா (10) மற்றும் அபுதாபி (8) ஆகிய இடங்களில் நடைபெறும். லீக் கட்டத்தின் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும். இத்தொடரில், அக்டோபர் 10 அன்று குவாலிஃபையர் 1 போட்டி துபாயிலும், எலிமினேட்டர் மற்றும் குவாலிபையர் 2 ஷார்ஜாவில் முறையே அக்.11 மற்றும் அக்.13ல் தொடங்கும்.

Story first published: Wednesday, August 25, 2021, 14:50 [IST]
Other articles published on Aug 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+