Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி போட்ட உத்தரவு.. சிஎஸ்கேவிலிருந்து 6 பேர் நீக்கம்.. பல கோடி ரூபாய் மிச்சம்..முழு லிஸ்ட் இதுதான்

சென்னை: 2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து மொத்தமாக 6 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள வீரர்கள் எல்லோரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர் .

2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு சிஎஸ்கே அணி பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அணிகள் விடுவிக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஐபிஎல்லில் இருக்கும் 8 அணிகளும் தாங்கள் விடுவிக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சிஎஸ்கே அணி முக்கியமான பல வீரர்களை தக்க வைத்துள்ளது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணி மொத்தமாக வெளியே அனுப்பிய வீரர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது. அதன்படி கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார். கடந்த சீசன் ஐபிஎல்லில் இவர்கள் யாரும் சரியாக ஆடாத நிலையில் இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

நீக்கப்படாத வீரர்கள்

நீக்கப்படாத வீரர்கள்

இந்த 6 பேர் போக சிஎஸ்கேவின் முக்கியமான வீரர்களான சுரேஷ் ரெய்னா, டு பிளசிஸ், பிராவோ, தோனி, ஜடேஜா, சாம் கரன், கெய்க்வாட், என் ஜெகதீசன், கே. எம் ஆசிப், ஹஸல்வுட், கே சர்மா, இம்ரான் தாஹிர், மிட்சல் சான்டர், சாய் கிஷோர், அம்பதி ராயுடு, ஷரத்துல் தாக்கூர், தீபக் சாகர் ஆகியோர் அணியில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

எத்தனை பேர்

எத்தனை பேர்

தற்போது சிஎஸ்கே அணியிடம் 11 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது. வீரர்களுக்கான குறைந்தபட்ச தொகையே 20 லட்சம் ரூபாய் ஆகும். இந்த தொகையை வைத்து சிஎஸ்கே அணி புதிய வீரர்களை ஏலம் எடுக்க முடியாது. தற்போது 6 வீரர்களை நீக்கி உள்ள காரணத்தால் சிஎஸ்கே அணியின் கையிருப்பு அதிகரிக்கும்.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

இதில் பியூஸ் சாவ்லா 6.5 கோடி ரூபாய்க்கு, கரன் சர்மா 5 கோடி ரூபாய்க்கும், ஜாதவ் 7.8 கோடி ரூபாய்க்கும் வெளியிடப்படுகிறார்கள். இதனால் மொத்தமாக சிஎஸ்கேவிடம் 25 கோடி ரூபாய் வரை பணம் மீதம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் ஏலத்தில் சிஎஸ்கே நிறைய வீரர்களை எடுக்க வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, January 20, 2021, 18:23 [IST]
Other articles published on Jan 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+