For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே விரித்த வலை.. எலி போல் சிக்கிய கோடீஸ்வர அணிகள்..ஸ்டோக்ஸை வாங்கியதன் பின் உள்ள மாஸ்டர் ப்ளான்

கொச்சி: ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் பென் ஸ்டோக்ஸுக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளது.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடர் இன்று கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவைன் பிராவோவுக்கு மாற்றாக யாரை கொண்டு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

பிராவோவுக்கு சரியான மாற்று என்றால் அது இங்கிலாந்தின் சுட்டிக்குழந்தை சாம் கரண் தான், அவரை தான் மீண்டும் கொண்டு வரப்போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகின. இதற்கான முயற்சிகள் தான் முதலில் நடந்தன.

பிராவோவுக்கு மாற்று

பிராவோவுக்கு மாற்று

ஆல்ரவுண்டர்களில் முதல் நபராகவே சாம் கரண் தான் விடப்பட்டார். மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், ஐதராபாத் என பல அணிகளும் போட்டிப்போட்ட நிலையில் சிஎஸ்கேவும் கடைசி நேரத்தில் உள்ளே நுழைந்தது. இதனால் எடுத்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனினும் தொகை அதிகமானதால் இறுதியில் பஞ்சப் அணி 18.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.

 எதிர்பார்க்காத ட்விஸ்ட்

எதிர்பார்க்காத ட்விஸ்ட்

இந்நிலையில் பிராவோவுக்கு மாற்று அவர் இல்லை என்பது கடைசியில் தான் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் விட்டவுடன் அவரை வாங்க லக்னோ, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் போட்டியிட்டன. சாம் கரணுக்கு வழங்கியதை போன்றே அணிகள் மலமலவென தொகையை உயர்த்தி ரூ. 50 கோடி வரை கொண்டு சென்றனர்.

முன்பே அறிந்த சிஎஸ்கே

முன்பே அறிந்த சிஎஸ்கே

ஆனால் சாம் கரண் அளவிற்கு யாரும் ஸ்டோக்ஸுக்கு செல்ல மாட்டார்கள் என்பதை சிஎஸ்கே நன்கு அறிந்திருந்தது. குறிப்பாக பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் ஏற்கனவே அதிக தொகைகளை வாரி வழங்கிவிட்டன. மும்பையும் கேமரூன் கிரீனுக்காக செலவளித்துவிட்டனர். இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திய சிஎஸ்கே ரூ. 15 கோடி தாண்டியவுடன் ஸ்டோக்ஸுக்காக களத்தில் குதித்தது.

ஏன் பென் ஸ்டோக்ஸ்

ஏன் பென் ஸ்டோக்ஸ்

சிஎஸ்கேவை தாண்டி ரூ. 16 கோடிக்கு மேல் எந்த அணியாலும் செலவளிக்க மனமில்லை . இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை தட்டித்தூக்கியது. ஸ்டோக்ஸுக்கு ஏற்கனவே தோனியுடன் லக்னோ அணியில் பணியாற்றி அனுபவம் உள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆடும் அவரின் தன்மை சிஎஸ்கேவுக்கு பொருந்தக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 23, 2022, 16:34 [IST]
Other articles published on Dec 23, 2022
English summary
CSk's Mega plan helps to Buy england super star ben stokes in IPL 2023 mega auction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+