Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL- 100வது விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி.. திருப்பி கொடுத்த ருத்துராஜ், மொயின்..குறுக்கே வந்த ரஷித்

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் 2023ஆம் ஆண்டில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே, குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து வருகிறது. இதனையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.

ஒரு புறம் ருத்துராஜ் கெய்க்ட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தாலும், மறுபுறம் 6 பந்துகளை எதிர்கொண்ட கான்வே 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது முகமது ஷமி வீசிய பந்து, கான்வேவின் ஸ்டம்பை பதம் பார்த்தது. இது சிஎஸ்கேக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

CSK scores Big runs in Powerplay with little twist

எனினும் ருத்துராஜ் மற்றும் மொயின் அலி ஜோடி குஜராத் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதனையடுத்து அயர்லாந்து வீரர் ஜேஸ் லிட்டல் முதல் ஓவர் வீச வந்தார். அப்போது அவரது ஓவரை மொயின் அலி மற்றும் ஷமி அதிரடியாக விளையாடி அந்த ஓவரில் 15 ரன்களை எதிர்கொண்டனர்.

மொயின் அலி 17 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்த நிலையில், ரஷித் கான் பந்தில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனால் சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 51 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்துள்ளது. கெய்க்வாட் 13 பந்தில் 24 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Story first published: Friday, March 31, 2023, 20:18 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+