Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: சிவம் துபே என்னாச்சு உங்களுக்கு? அல்வா போன்ற கேட்சை கோட்டை விட்டார்..கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சிவம் துபே மோசமாக விளையாடி வரும் நிலையில் தற்போது ஃபீல்டிங்கிலும் சொதப்பி இருப்பது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவம் துபேவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஏற்கனவே பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது மீண்டும் அவர் சொதப்பி இருக்கிறார்.

32 வயதான சிவம் துபே இதுவரை 9 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 150 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய பேட்டிங் சராசரி 30 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் 140 என்று அளவில் இருக்கிறது. இந்த தொடரில் மொத்தமாகவே அவர் 6 சிக்சர்கள் தான் அடித்து இருக்கிறார்.

இதனால் சிவம் துபே பேட்டிங் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோன்று பந்துவீச்சில் மொத்தமாக அவர் மூன்று ஓவர் தான் இந்த சீசன் முழுவதும் வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். இந்த சூழலில் சிவம் துபே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு எளிதான கேட்சை கைவிட்டது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

CSK: சிவம் துபே நீங்க உலக கோப்பையை வென்றவர் மறந்துவிடாதீர்!அணியை அடிக்கடி மாற்றாதீங்க-முரளி கார்த்தி

CSK: சிவம் துபே நீங்க உலக கோப்பையை வென்றவர் மறந்துவிடாதீர்!அணியை அடிக்கடி மாற்றாதீங்க-முரளி கார்த்தி

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் நமன் தீர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிவம் துபே கோட்டை விட்டார். நூர் அகமது வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது சிவம் துபே கேச்சை கோட்டை விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட நமன் தீர் அபாரமாக விளையாடி 37 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அதன் பின் சிவம் துபே மீண்டும் ஒரு கேட்ச் வாய்ப்பை பவுண்டரில் லைனில் கோட்டை விட்டார். இதனால் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

IPL 2026: சிஎஸ்கே செய்த மகா முட்டாள்தனம்.. விக்கெட் எடுத்த பவுலரை நீக்கியது ஏன்? ரசிகர்கள் கோபம்

IPL 2026: சிஎஸ்கே செய்த மகா முட்டாள்தனம்.. விக்கெட் எடுத்த பவுலரை நீக்கியது ஏன்? ரசிகர்கள் கோபம்

பேட்டிங்கும் செய்யாமல் பந்துவீச்சும் செய்யாமல் பில்டிங்கிலும் சொதப்பும் ஒரு வீரர் தேவைதானா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். சிவம் துபேவை அணியை விட்டு நீக்க வேண்டும் என்றும் அவர் சிஎஸ்கே அணிக்கு கூடுதல் சுமையாக இருக்கிறார் என்றும் ரசிகர்கள் சாடியுள்ளனர். அவருக்கு வேறு ஏதேனும் ஒரு வீரரை அணியில் சேர்க்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Saturday, May 2, 2026, 21:30 [IST]
Other articles published on May 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+