For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குதிரை உடனேயே ரேஸ்.. முழு ஃபிட்னஸுடன் இருக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி.. இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ

இந்திய முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி, தனது செல்லப்பிராணியுடன் ஓடி பிடித்து விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சமூக வலைதளங்களில் தற்போது ஆக்டிவாக இல்லை என்றாலும், அவர் குறித்த அப்டேட்கள் அடிக்கடி வெளியாகி கொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில் தோனி என்ன செய்துகொண்டிருக்கிறார் என அவரது மனைவி சாக்‌ஷி தோனி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

விடுமுறை

விடுமுறை

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், கொரோனா காரணமாக பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டு அடுத்த தொடருக்கு தயாராகி வரும் நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி விடுமுறையை நாட்களை கொண்டாடி வருகிறார்.

குதிரையுடன் ரேஸ்

குதிரையுடன் ரேஸ்

தோனிக்கு வாகனங்கள் தவிர்த்து விலங்குகள் மீதும் அதீத ஆர்வம் உள்ளது. இதற்காக தனது பண்னை இல்லத்தில் விலங்குகளை வளர்த்து வருகிறார். இவர் இந்நிலையில் தோனி, தனது செல்லப்பிராணியான 'ஷெட்லாண்ட் போனி' என்ற குட்டிக் குதிரையுடன் ஓடிபிடித்து விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த குதிரையை தோனி தனது மகளுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரிசாக அளித்தார்.

 ஜடேஜாவுக்கும் விருப்பம்

ஜடேஜாவுக்கும் விருப்பம்

போனி குதிரை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜீவா வெளியிட்டு வந்த நிலையில் தோனி விளையாடும் வீடியோவை சாக்‌ஷி தோனி வெளியிட்டுள்ளார். தோனியை தவிர்த்து மற்றொரு சிஎஸ்கே வீரர் ஜடேஜாவுக்கும் குதிரைகள் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அவரும் தனது வீட்டில் தனியாக பண்ணை அமைத்து குதிரைகளை பராமரித்து வருகிறார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்தாண்டு அவரின் தலைமையிலான சிஎஸ்கே அணி அற்புதமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை அந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றுள்ளது. மேலும் புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 13, 2021, 20:46 [IST]
Other articles published on Jun 13, 2021
English summary
CSK Skiper MS Dhoni races with pony horse in video, Sakshi Dhoni Shared tha video
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+