ஐபிஎல்லுக்கு முன்பு.. அவசர அவசரமாக மும்பைக்கு கிளம்பி சென்ற தோனி.. சிஎஸ்கேவிற்காக புதிய அஸ்திரம்?!
சென்னை: இரண்டு விதமான காரணங்களுக்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தற்போது மும்பைக்கு கிளம்பி சென்றுள்ளார்.
2021 ஐபிஎல் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் இதற்கான ஏலம் சென்னையில் நடக்க உள்ளது. மினி ஏலம்தான் நடக்க போகிறது என்றாலும் இதில் நிறைய சுவாரசியங்கள் நடக்கலாம்.
முக்கியமாக ஒவ்வொரு அணியும் பல புதிய வீரர்களை இந்த முறை ஏலத்தில் குறி வைக்கும் என்று கூறப்படுகிறது.

ஏலம்
இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி யாரை எடுக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. இன்னும் 10 நாட்களில் இந்த ஏலம் நடக்க உள்ளது. அதற்கு முன் கேப்டன் தோனி சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் ஏலம் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தற்போது மும்பைக்கு கிளம்பி சென்றுள்ளார். இரண்டு விதமான காரணங்களுக்காக தோனி மும்பை சென்றுள்ளார். மும்பையில் தோனி விளம்பர ஷூட் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவசரமாக கிளம்பி மும்பை சென்றுள்ளார்.

மும்பை
அதேபோல் மும்பையில் ஐபிஎல் குறித்தும் தோனி முக்கிய விவாதம் ஒன்றை நடத்த உள்ளார். பரோடா மற்றும் மும்பை மஹாராஷ்டிரா அணியில் ஆடிய இளம் வீரர்கள் சிலரை சிஎஸ்கேவில் எடுக்க தோனி திட்டமிட்டு உள்ளார். இதற்காக மும்பையில் சில வீரர்களை சந்திக்க தோனி முடிவு செய்துள்ளார்.

முடிவு
சையது முஷ்டாக் கோப்பை தொடரில் இளம் வீரர்கள் பலர் சிறப்பாக ஆடினார்கள். இவர்களைதான் சிஎஸ்கே அணியில் எடுக்க முயலும் என்கிறார்கள். 800+ இளம் வீரர்கள் இந்த ஐபிஎல் தொடருக்கு தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.

எப்படி
இதில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா வீரர்களை தோனி குறி வைக்கும் என்கிறார்கள். இதன் காரணமாகவே தோனி மும்பைக்கு சென்றார் என்கிறார்கள். இதனால் இந்த ஏலத்தில் கண்டிப்பாக சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு குறி வைக்க போகிறது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications