For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடேங்கப்பா 150,00,00,000 இவ்வளவா... என்னன்னு கேக்கறீங்களா... தோனியோட ஐபிஎல் சம்பளம்தான்!

டெல்லி : ஐபிஎல் 2020 தொடர் சிறப்பான வகையில் நடந்து முடிந்துள்ளது. தற்போது 2021 ஐபிஎல் சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வரும் 20ம் தேதிக்குள் தங்களது அணி வீரர்களுக்கான உத்தேச பட்டியலை ஐபிஎல் அணிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2008ல் ஐபிஎல் துவங்கியதில் இருந்து வரும் சீசன் வரை ஐபிஎல்லில் தோனி பெறும் சம்பளம் 150 கோடி ரூபாயை கடந்துள்ளது.

சிஎஸ்கே கேப்டன்

சிஎஸ்கே கேப்டன்

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் துவக்கத்தில் இருந்து சிஎஸ்கே கேப்டனாக திகழ்ந்து வருகிறார். அந்த அணிக்காக 3 கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளார். இதுவரை அந்த அணி கடந்த ஆண்டை தவிர்த்து ப்ளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெறாமல் இருந்ததில்லை.

தோனி உறுதி

தோனி உறுதி

இந்நிலையில் வரும் ஐபிஎல் சீசனிலும் தான் சிஎஸ்கேவிற்காக விளையாடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார். கடந்த ஐபிஎல் 2020 தொடரின் ஒரு போட்டியின்போது இதை உறுதியாக அவர் கூறியிருந்தார். இதே கருத்தை அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனும் உறுதிப்படுத்தியிருந்தார்.

சிஎஸ்கே சிஇஓ உறுதி

சிஎஸ்கே சிஇஓ உறுதி

ஒரு போட்டியில் அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தொடர்ந்து தோனி 2021 சீசனிலும் சிஎஸ்கேவிற்காக கேப்டனாக செயல்படுவார் என்றும் அவர் ஐபிஎல் போட்டிகளின்போது தெரிவித்திருந்தார். தற்போது ஐபிஎல் 2021 சீசனுக்கான பணியை பிசிசிஐ முடுக்கி விட்டுள்ளது.

150 கோடி ரூபாய்

150 கோடி ரூபாய்

தோனியை 15 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே இந்த சீசனிலும் தக்க வைக்க உள்ளது. இதுவரை ஐபிஎல் மூலம் 137.8 கோடி ரூபாயை தோனி சம்பளமாக பெற்றுள்ளார். இந்நிலையில் அடுத்த சீசனில் 15 கோடி ரூபாயும் சேரும்போது அவர் ஐபிஎல் மூலம் 150,00,00,000 கோடி ரூபாயை பெறும் முதல் வீரர் என்ற நிலையை அடைவார்.

ரோகித், விராட் அடுத்தடுத்த இடம்

ரோகித், விராட் அடுத்தடுத்த இடம்

தோனியை அடுத்து ஐபிஎல் மூலம் அதிக சம்பளத்தை பெற்றுள்ள இரண்டாவது வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ரோகித் சர்மாவும், மூன்றாவது வீரராக விராட் கோலியும் உள்ளனர். இவர்கள் இருவரும் முறையே, 131.6 கோடி மற்றும் 126.2 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளனர்.

Story first published: Thursday, January 7, 2021, 20:17 [IST]
Other articles published on Jan 7, 2021
English summary
Dhoni is followed by MI skipper Rohit Sharma and RCB captain Virat Kohli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+