Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர் சொல்றது எல்லாம் வேலைக்கு ஆகாது... தோனி குறித்த கமெண்ட்டுக்கு லாரா பதிலடி!

மும்பை : ஐபிஎல்லின் 19வது போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இதனிடையே, சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரின் துவக்கத்தில் தோனி விளையாட வேண்டும் என்ற முன்னாள் வீரர் கவுதம் கம்பீரின் கருத்துக்கு முன்னாள் மேற்கிந்திய வீரர் பிரையன் லாரா பதிலடி கொடுத்துள்ளார்.

19வது போட்டி

19வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 19வது போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையில் மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

7வது இடத்தில் தோனி

7வது இடத்தில் தோனி

இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக காணப்படுகிறது. வெற்றிக்கான தீவிரத்தில் இரு அணிகளும் உள்ளன. முதல் 3 போட்டிகளில் சிறப்பாக விளையாடாத ருதுராஜ் கெய்க்வாட், கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார். இதேபோல அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, 7வது இடத்தில் இறங்கி விளையாடி வருகிறார்.

தோனியின் 35 ரன்கள்

தோனியின் 35 ரன்கள்

இதுவரை 3 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள தோனி 35 ரன்களை அடித்துள்ளார். கடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய தோனி, 8 பந்துகளில் 17 ரன்களை அடித்திருந்தார். இதில் 2 பவுண்டரிக்ள மற்றும் ஒரு சிக்ஸ் அடக்கம். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 3ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

லாரா மாற்று கருத்து

லாரா மாற்று கருத்து

இந்நிலையில் தோனி சிஎஸ்கேவின் பேட்டிங்கின் துவக்க ஆர்டரில் விளையாட வேண்டும் என்று முன்னாள் விரர் கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தார். அவர் முதலில் விளையாடுவதை அணி எதிர்பார்ப்பதாகவும் கம்பீர் கூறியிருந்தார். இந்நிலையில் தோனி துவக்க ஆர்டரில் விளையாட வேண்டிய தேவை இல்லை என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பிரையன் லாரா கம்பீரின் கருத்துக்கு மாற்று கருத்தை வெளியிட்டுள்ளார்.

லாரா அறிவுறுத்தல்

லாரா அறிவுறுத்தல்

சிஎஸ்கேவில் பேட்டிங் ஆர்டரில் அதிகமான வீரர்கள் உள்ள நிலையில், விக்கெட் கீப்பிங்கிலும் கேப்டன்ஷிப்பிலும் தோனி கவனம் செலுத்தினாலே போதுமானது என்று லாரா கூறியுள்ளார். அவர் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு, கேப்டனாக ஷிப்பை சிறப்பாக வழிநடத்தினாலேயே சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 25, 2021, 16:23 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+