இது லிஸ்ட்லையே இல்லையே.. ரூ.15 கோடி வீரரை 1.50 கோடிக்கு தூக்கிய சிஎஸ்கே.. மாஸ்டர் ஸ்ட்ரோக் - எப்படி?
கொச்சி: ஐபிஎல் ஏலத்தில் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு வீரரை வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் படு விறுவிறுப்புடன் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல அட்டகாசமான முடிவுகளை எடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
பிராவோவுக்கு மாற்று வீரராக சாம் கரண் நிச்சயம் வேண்டும் என்ற சூழலில் அவரை தவறவிட்டு அதிர்ச்சி தந்தனர். ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனையும் தவறவிட்டனர். ஆனால் அதிக அனுபவம் வாய்ந்த பென் ஸ்டோக்ஸை தட்டித்தூக்கி அசத்தியது.

சிஎஸ்கேவின் திட்டம்
சிஎஸ்கேவின் டாப் ஆர்டரில் ஒரு அனுபவ இந்திய வீரர் தேவை என்ற போது மணிஷ் பாண்டே, மயங்க் அகர்வால் ஆகியோரில் யாரோ ஒருவர் இருப்பார் என எதிர்பார்த்த சூழலில் அஜிங்கியா ரகானேவை கொண்டு வந்து ஷாக் கொடுத்தனர். இதே போல ஷாயிக் ரஷித், ஹரி நிசாந்த் என U19 உலகக்கோப்பையில் கலக்கிய வீரர்களை தூக்கினர்.

மிக முக்கிய ஏலம்
இந்நிலையில் இதனையெல்லாம் விட பெரிய ஷாக் நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜேமிசனை வாங்கியது தான். கடந்தாண்டு ரூ. 15 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கிய அந்த வீரரை இந்தாண்டு வெறும் ரூ. 1.50 கோடிக்கு தட்டித்தூக்கியது சென்னை அணி. குறைந்த விலைக்கு கிடைத்தார் என்று வாங்காமல், மிகப்பெரிய காரணத்திற்காக அவரை உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

என்ன காரணம்
2022ம் ஆண்டு டெத் ஓவர்களில் அதிக ரன்களை கசியவிட்ட 2வது அணி சிஎஸ்கே தான். ரன்களை வாரி வழங்கினர். எனவே தீபக் சஹார், டுவைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சௌத்ரியுடன் சேர்ந்து டெத் ஓவர்களில் வீசக்கூடிய ஒரு தரமான வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டார். அதற்காக சரியாக மாட்டினார் கெயில் ஜேமிசன். இவரின் செயல்பாடுகள் இந்திய களங்களுக்கு லட்டு போன்று அமைந்துள்ளது.

ஒத்துழைத்த இயற்கை
கெயில் ஜேமிசனின் உயரம் 6.8 அடி ஆகும். இந்திய களங்களில் இவ்வளவு உயரம் கொண்ட வீரர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். ஜேமிசனின் வேகம் சராசரியாக 135 கிமீ தான் இருக்கும் என்றாலும், பவுன்சர்களில் பெரிய அச்சுறுத்தல் இருக்கும். குறிப்பாக இந்திய வீரர்கள் மிக உயரமான பவுலர்களை சமாளிப்பதில் மோசமாக திணறியுள்ளனர். எனவே ஜேமிசனை கடைசி ஓவரில் பயன்படுத்தலாம். இதே போல லோயர் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேனாகவும் ஜேமிசன் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications