Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 பந்தில் 32 ரன்கள் எடுத்த ருதுராஜ்.. மைக்கேல் ஹஸியின் சாதனை முறியடிப்பு..CSK வை காப்பாற்றிய தங்கம்

டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட், மைக்கேல் ஹசியின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். வாழ்வா சாவா என்ற கட்டத்தில் களம் இறங்கிய சிஎஸ்கே அணி இன்று டெல்லியை கண்டிப்பாக வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் மற்றும் கான்வே ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

CSK Star batsman ruturaj gaikwad breaks micheal hussey record

இதனால் பவர் பிளே முடிவு சிஎஸ்கே அணி 52 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக இருந்ததால் இந்த ஜோடி கொஞ்சம் பொறுமையாக விளையாடியது.ஆனால் அதன் பிறகு சுழற் பந்துவீச்சாளர்களை ருதுராஜ், கான்வே ஜோடி வம்சம் செய்தார். ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவர் முடிவில் 33 பந்துகளை எதிர் கொண்ட ருதுராஜ் 36 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.

ஆனால் 13 ஓவர் முடிவில் அதே ருதுராஜ் 46 பந்துகளை எதிர் கொண்டு 78 ரன்கள் விளாசி இருந்தார். இந்த ஏழு பந்துகளில் ருதுராஜ் 32 ரன்கள் குவித்து இருந்தார். இதில் 6,6,1,1,6,6 என ருதுராஜ் கெய்க்வாட் டேக் ஏழு பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இதன் மூலம் ருதுராஜ் மற்றும் சிஎஸ்கே வின் ஸ்கோர் கிடு கிடுவென உயர்ந்தது.

CSK Star batsman ruturaj gaikwad breaks micheal hussey record

இதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் க 33 பந்துகளில் அரைசதம் கடந்தது மட்டுமல்லாமல் மைக்கேல் ஹசியின் சாதனை முறியடித்து இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக களம் இறங்கிய தொடக்க வீரர்களில் மைக்கேல் ஹஸி, 13 முறை அரைசதம் அடித்திருக்கிறார். தற்போது ருதுராஜ் அவரை முறியடித்து 14 முறை அரைசதம் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் முன்னாள் சி எஸ் கே வீரர் 16 முறை 600 அடித்துள்ளார். ருதுராஜ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்த ஜோடி ஐபிஎல் வரலாற்றில் ஆயிரம் ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை பெற்றது.

Story first published: Saturday, May 20, 2023, 18:15 [IST]
Other articles published on May 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+