
தீபக் சாஹர்
தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனால் அவரது பந்தை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். அவர் வீசிய முதல் ஓவரில் கெயில் மெயர்ஸ் டி.ஆர்.எஸ். உதவியால் காப்பாற்றப்பட்டார். பின்னர், 5வது பந்திலேயே சாஹர் துல்லிய பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

காயம்
இதே போன்று மற்றொரு தொடக்க வீரரான சாய் ஹோப்பும் தீபக் சாஹரின் பந்துவீச்சில் வெளியேறினார். பந்து நன்றாக ஸ்விங் ஆனதால், தீபக் சாஹரை வைத்தே போட்டியை முடித்துவிடலாம் என்று ரோகித் சர்மா நினைத்த நிலையில், அவரது 2வது ஓவரில் கடைசி பந்தை வீசும் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

வெளியேறினார்
வலியால் தீபக் சாஹர் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். இதனால் ரோகித் சர்மாவுக்கு நெருக்கடி ஏற்பட, அவர் வெங்கடேஷ் ஐயரை வைத்து சமாளிக்க முயற்சி செய்தார். இந்த நிலையில், தீபக் சாஹரின் காயம் எந்த அளவிற்கு சீரியஸ் ஆனது என்று தெரியவில்லை.

சிஎஸ்கே விற்கு சிக்கல்
சாதாரண தசை பிடிப்பு என்றால், எந்த சிக்கலும் இல்லை . இல்லையெனில் அவர் மீண்டும் பந்துவீச ஒன்றரை மாதம் மேல் ஆகலாம். இதனால், ஐபிஎல் ஏலத்தில் 14 கோடி ரூபாய் கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்துள்ள சிஎஸ்கே விற்கு பெரும் பின்னடைவை தரும். இதனால் சிஎஸ்கே ரசிகர்களும் கலக்கத்தில் உள்ளனர்


Click it and Unblock the Notifications











