Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்காக சிஎஸ்கே கொடுத்த ஸ்பெஷல் பரிசு.. ஒட்டுமொத்த வீரர்களும் இணைந்தனர்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தோனியின் பிறந்தநாளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதற்காக முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தோனிக்கு மிகவும் நெருக்கமான சிஎஸ்கே அணி, அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கே வாழ்த்து

சிஎஸ்கே வாழ்த்து

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மட்டுமே இருந்து வருகிறார். சிஎஸ்கே அணிக்கும் தோனிக்குமான உறவு கிரிக்கெட்டை விட மேலானது என்பதை பலரும் தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம் அணி வீரர்களுடன் தோனி பழகும் முறையே ஆகும். எனவே அந்த அணி வீரர்களை வைத்தே தோனிக்கு ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது சிஎஸ்கே அணி.

ரெய்னா

ரெய்னா

அந்த வீடியோவில் பேசியுள்ள தோனியின் நீண்ட கால நண்பர் ரெய்னா, ஹாய் கேப்டன், உங்களின் வாழ்வில் நிறைய மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்க வேண்டும். உங்களின் குடும்பத்தினருடன் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரரே எனத்தெரிவித்துள்ளார்.

சாம் கரண் வாழ்த்து

சாம் கரண் வாழ்த்து

சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளையாக பார்க்கப்படும் சாம்கரண், பிறந்த நாள் வாழ்த்துகள் எம்.எஸ். இந்த நாள் அற்புதமாக அமைய வேண்டும். எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. உங்களுடன் விளையாடிய அனுபவம் மிகவும் நெருக்கமாக இருந்தது. இன்னும் சில ஆண்டுகள் நாம் இணைந்து விளையாடுவோம் என நம்புகிறேன். உங்களை விரைவில் காணுகிறேன் எனக்கூறியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா பேசுகையில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹி பாய், முழு உடற் ஆரோகியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும். உங்களை விரைவில் சந்திக்கிறேன் எனக்கூறியுள்ளார். அதே போல தோனி அதிகம் நம்பிக்கை வைத்த ருத்ராஜ் கெயிக்வாட், தினந்தோறும் உங்களை மைதானத்தில் பார்ப்பது எனக்கு கனவு மாதிரி இருக்கும். எனவே சிஎஸ்கே அணிக்காக நீண்ட காலம் நீங்கள் விளையாட வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

வைரல் வீடியோ

இதே போல சிஎஸ்கேவின் மற்ற முக்கிய வீரர்களான, இம்ரான் தாஹீர், கிருஷ்ணப்பா கௌதம், ராபின் உத்தப்பா ஆகியோரும் தோனிக்கு வாழ்த்து கூறியுள்ளனர். முக்கியமாக உத்தப்பாவின் மகன், ஐ லவ் யூ தோனி என கூறிய வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை பார்க்கலாம் என அணி நிர்வாகம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 7, 2021, 22:55 [IST]
Other articles published on Jul 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+