Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லில் சின்ன தல ரெய்னா தான் டாப்.... மற்றொன்றுக்கும் தயார்!

Recommended Video

ஐபிஎல்லில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் சாதனைகள் !!

சென்னை: ஐபிஎல் சீசன் 11 முடிய இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். பைனல்சில் மற்றொரு சாதனைக்கும் தயாராக உள்ளார்.

ஐபிஎல் 11வது சீசன் பிளே ஆப் சுற்றுகள் நடந்து வருகின்றன. அடுத்தது 2-வது தகுதிச் சுற்று ஆட்டம் மற்றும் பைனல்ஸ் மட்டுமே உள்ளன.

CSK suresh raina top scorer in the ipl history

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்திருந்தார்.

இந்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது 22 ரன்களை எடுத்ததன் மூலம், மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ரெய்னா. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்துடன் இந்த சீசனை அவர் முடிப்பார். இதுவரை 175 ஆட்டங்களில் 4,953 ரன்களை எடுத்துள்ளார் ரெய்னா. கோஹ்லி, 4,948 ரன்களைப் பெற்றுள்ளார்.

சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் 14 ஆட்டங்களில் 413 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்து நடைபெறும் பைனல்சில், மேலும் 47 ரன்கள் எடுத்தால், ஐபிஎல் வரலாற்றில் 5,000 ரன்கள் கடந்த முதல் வீரராவார் ரெய்னா.

Story first published: Thursday, May 24, 2018, 12:24 [IST]
Other articles published on May 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+