For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்.. தோனி வைத்த "டிவிஸ்ட்" - ஆர்சிபி-க்கு இருக்கு ஆப்பு

அமீரகம்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறது.

Recommended Video

#OnThisDay: Dhoni's Indian Team lifted the T20 World Cup 2007 | OneIndia Tamil

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று (செப்.24) நடைபெறும் ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில், சென்னை அணியில் மிக முக்கிய மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 16 பாயிண்ட்ஸ்

16 பாயிண்ட்ஸ்

இந்த ஐபிஎல் 2021 தொடரில் இரண்டாம் பகுதியில், முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட தோனி ஆர்மி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று தனது 2வது போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணியைப் பொறுத்தவரை தற்போது 12 புள்ளிகள் பெற்றிருப்பதால், இன்னும் 2 போட்டிகளில் வென்று 16 புள்ளிகள் பெற்றுவிட்டால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம்.

 பிளே ஆஃப் வாய்ப்பு

பிளே ஆஃப் வாய்ப்பு

எனவே, எந்தவித சிக்கலும் இன்றி, பிளே ஆஃப் முன்னேற, இந்த போட்டியை பயன்படுத்திக் கொள்ள சிஎஸ்கே முயற்சிக்கும். அதேசமயம், 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாம் இடத்தில் உள்ளது. ஸோ, பிளே ஆஃப் ரேஸில் நீடிக்க இந்த போட்டி பெங்களூருவுக்கு சற்று முக்கியத்துவம் வாய்ந்ததே. குறிப்பாக, கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, படுதோல்வி அடைந்த நிலையில், இன்று பலம் வாய்ந்த சென்னை அணியை எதிர்கொள்கிறது.

 முக்கிய மாற்றம்

முக்கிய மாற்றம்

இந்நிலையில், சென்னை அணியின் பிளேயிங் லெவனில் இன்று ஒரு முக்கிய மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது யாரென்று பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாதிரி பிளேயிங் லெவன்: ஃபாஃப் டு பிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (c & wk), டுவைன் பிராவோ / சாம் கர்ரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

 யார் நீக்கம்?

யார் நீக்கம்?

ஸோ, இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். யெஸ்.. 6 நாள் குவாரண்டைனில் இருந்த சாம் கர்ரன் இன்றைய போட்டியில் விளையாட ரெடியாக உள்ளார். ஆகையால், அவருக்கு பதில் தோனி யாரை நீக்கப் போகிறார்? என்பதே கேள்வி. மும்பைக்கு எதிராக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டது மட்டுமின்றி, விக்கெட்டுகளையும் அள்ளிக் கொடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் டுவைன் பிராவோ. அவரை நீக்கிவிட்டு சாம் கர்ரன் உள்ளே கொண்டுவரப்படுவாரா? என்பது தெரியவில்லை. அப்படி பிராவோவை நீக்க தோனி விரும்பவில்லை எனில், அவருக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் ஜோஷ் ஹேசில்வுட் தான். ஷார்ஜா பிட்சை பொறுத்தவரை, ஷார்ட் பவுண்டரி கொண்டிருக்கும் ஷார்ஜா, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. இங்கு Pace அந்தளவு எடுக்குமா என்று தெரியவில்லை. அதேசமயம் ஸ்பின் கொஞ்சம் கைக்கொடுக்கலாம். ஆக மொத்தம் இன்று அணியில் ஒரு முக்கிய மாற்றம் உறுதி.

Story first published: Friday, September 24, 2021, 19:29 [IST]
Other articles published on Sep 24, 2021
English summary
csk important change in playing xi against rcb - சிஎஸ்கே
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+