ஒரு தமிழனைக் கூட காணலை.. இதுக்குப் பேரு சென்னை சூப்பர் கிங்ஸாம்.. என்னய்யா இது??
Recommended Video

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இரண்டு வருடம் கழித்து மீண்டும் போட்டிக்கு திரும்பி வந்து இருக்கிறது.
ஆனால் சென்னை மீண்டும் திரும்பி இருக்கிறது என்று சந்தோஷபடகூட முடியாத அளவிற்கு நேற்று ஏலத்தில் நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இதுதான் சென்னை அணியா என்று பலரும் சந்தேகப்படும் அளவுக்கு சில விஷயங்கள் நடந்து இருக்கிறது.
முக்கியமாக சென்னை அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட இதுவரை எடுக்கப்படவில்லை. இது பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

36 வயதினிலே
முதலில் சென்னையை அணியை அனைவரும் விமர்சிக்க காரணம் அணியில் இளம் வீரர்கள் யாருமே இல்லை. சென்னை அணியில் இருக்கும் இளமையான வீரர் ஜடேஜா என்று கூறினால் எல்லோரும் சிரித்து விடுவார்கள். அவருக்கு 29 வயது ஆகியுள்ளது.

அஸ்வின் போய்விட்டார்
அதற்கு அடுத்தபடியா சென்னை அணி அஸ்வினை எடுக்காமல் போனது. கரன் சர்மாவிற்கு 5 கோடி வரை கொடுத்து எடுத்த சென்னை அணி அஸ்வினை எடுக்க தவறி இருக்கிறது. டோணி அஸ்வினை எடுப்போம் என்று கொடுத்த வாக்கும் நிறைவேறாமல் போய் உள்ளது.

தமிழ்நாடு
சென்னை அணியில் இப்போது வரை தமிழ்நாடு வீரர் யாருமே எடுக்கப்படவில்லை. தினேஷ் கார்த்திக்கை மட்டும் எடுக்க முயன்றார்கள். யாரும் எடுக்காத முரளி விஜயை கூட சென்னை அணி எடுக்க முன்வரவில்லை.

என்ன நடக்கும்
இன்று சென்னை அணியில் சில தமிழர்கள் எடுக்கப்படலாம். வாஷிங்க்டன் சுந்தர் போன்ற வீரர்கள் ஏலம் வர இருக்கிறார்கள். அவர்கள் அணிக்கு எடுக்கப்படலாம். சென்னை அணி என்ன திட்டம் வைத்து இருக்கிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications