Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லிக்கு எதிராக.. இயற்கையே சிஎஸ்கேவுக்கு கொடுத்த "கிஃப்ட்" - அதிருப்தியை வெளிப்படுத்திய பண்ட்

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே சேஸிங் செய்வது, புள்ளி விவரத்தின் அடிப்படையில் சென்னைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று நடைபெற்று வரும் Qualifier 1 ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அணியில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

 வெற்றிப் பெற தீவிரம்

வெற்றிப் பெற தீவிரம்

இந்த போட்டியில், வெற்றிப் பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றிப் பெறும் அணியோடு மீண்டும் மோதும். ஸோ, எப்படிப்பார்த்தாலும், இன்றைய போட்டியில் தோற்கும் அணிக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்கிறது. எனினும், இன்றே வெற்றியை பதிவு செய்து, இறுதிப் போட்டிக்கு சென்றுவிட வேண்டும் என்று டெல்லி மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், டாஸ் வென்ற தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (w/சc), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 மீண்டும் ஏமாற்றம்

மீண்டும் ஏமாற்றம்

அதேசமயம், டெல்லி அணியில் ஒரு முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அணியில், ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் (w/c), ஸ்ரேயாஸ் ஐயர், ஷிம்ரோன் ஹெட்மயர், டாம் கர்ரன், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அணியில், ரிபல் படேலுக்கு பதிலாக டாம் கர்ரன் சேர்க்கப்பட்டிருக்கிறார். டாஸ் வென்ற பிறகு பேசிய தோனி, "அணியில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை" என்று தெரிவித்தார். இதனால், சுரேஷ் ரெய்னா அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரெய்னா இல்லாததை விட, மிடில் ஆர்டரில் சொதப்பி வரும் உத்தப்பாவுக்கு பதில், இளம் வீரர் ஜெகதீசன் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் உத்தப்பாவுக்கே தோனி வாய்ப்பு அளித்திருப்பது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

 சேஸிங் சாதகம்

சேஸிங் சாதகம்

அதேசமயம் டாஸ் போட்ட பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், தான் உண்மையில் பதட்டமாக இருப்பதாக கூறியுள்ளார். காரணம், எப்படியாவது டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்து விட வேண்டும் என்று டெல்லி எதிர்பார்த்த நிலையில், தோனி டாஸ் வென்றுவிட்டார். இந்த துபாய் பிட்சில், சேஸிங் செய்யும் அணியே கடந்த ஆறு போட்டிகளாக வெற்றிப் பெற்றிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்யும் அணியால் பெரியளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. இதனால், சேஸிங் செய்யும் அணி போட்டியில் வெல்லும் என்பதே எக்ஸ்பெர்ட்ஸ்களின் கருத்தாக உள்ளது.

 ஜெயிக்குமா யெல்லோ ஆர்மி?

ஜெயிக்குமா யெல்லோ ஆர்மி?

சென்னை அணியைப் பொறுத்தவரை, அமீரகத்தில் சேஸ் செய்த அனைத்துப் போட்டிகளிலும் வென்றிருக்கிறது. ஆனால், முதலில் பேட்டிங் செய்த மூன்று போட்டிகளிலும் தோற்றிருக்கிறது. ஆகையால், தோனி டாஸ் வென்றிருப்பது பல வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதமாக அமைந்துள்ளது. கடந்த சில போட்டிகளாக டாஸ் இழந்த தோனி, கரெக்ட்டாக பிளே ஆஃபில் டாஸ் வென்றிருக்கிறார். இயற்கையாகவே பார்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல வாய்ப்பை, சூழலை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. பயன்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா தோனி ஆர்மி?

Story first published: Sunday, October 10, 2021, 20:23 [IST]
Other articles published on Oct 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+