Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொடுக்க முடியாது.. சிஎஸ்கேவின் திட்டத்திற்கு கேட் போடும் டேவிட் வார்னர்.. என்ன செய்வார் தோனி!

சிட்னி: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் போட்டிக்காக போட்டு வைத்து இருந்த முக்கியமான திட்டம் ஒன்றை ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தவிடுபொடியாக்கிவிட்டார் என்கிறார்கள்.

2021ல் நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முக்கியமான வீரர்களை தங்கள் அணியில் இருந்து நீக்க உள்ளது. கோர் வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை மொத்தமாக தூக்க உள்ளது.

மற்ற அணியில் இருக்கும் முக்கியமான வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது. எதிர்கால அணிக்கு உதவும் வகையில் சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது.

சிஎஸ்கே எப்படி

சிஎஸ்கே எப்படி

இந்த நிலையில் ஹைதராபாத் அணியில் இருக்கும் கேன் வில்லியம்சனை சிஎஸ்கே ஏலம் எடுக்க திட்டமிட்டு வருகிறது. கேன் வில்லியம்சன் நல்ல கேப்டன். எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் பொறுப்பேற்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

டி 20

டி 20

அதேபோல் டி 20 போட்டிகளில் கேன் வில்லியம்சன் நல்ல பார்மில் இருக்கிறார். இதனால் இவரை எப்படியாவது ஏலம் எடுக்கலாம் என்று சிஎஸ்கே நினைத்தது. கேப்டன் தோனியும் இதே திட்டத்தில்தான் இருந்தார். ஆனால் இந்த வருடம் பெரிய ஏலம் கிடையாது என்று உறுதியாகிவிட்டது.

மோசம்

மோசம்

இதனால் பேச்சுவார்த்தை மூலம் கேன் வில்லியம்சனை சிஎஸ்கே அணிக்கு மாற்றலாம். கேன் வில்லியம்சனை வெளியிடும்படி ஹைதராபாத் அணியுடன் பேசலாம் என்று சிஎஸ்கே திட்டமிட்டது. ஆனால் கேன் வில்லியம்சனை கொடுக்கும் திட்டம் ஹைதராபாத் அணிக்கு இல்லை என்கிறார்கள்.

திட்டம் இல்லை

திட்டம் இல்லை

என்ன நடந்தாலும் கேன் வில்லியம்சனை அளிக்கும் திட்டம் இல்லை என்று கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார். கேன் வில்லியம்சன் எங்கள் அணிக்கு முக்கியம், அவரை கண்டிப்பாக கொடுக்க முடியாது. அவரை ஏலத்தின் போது அணி மாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று டேவிட் வார்னர் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் சிஎஸ்கே இந்த வருடம் என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, January 5, 2021, 17:03 [IST]
Other articles published on Jan 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+