சென்னை: குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 10வது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியின் சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தீக்சனா அசத்தினார். இதனை முத்து படத்தில் ரஜினிகாந்த், நான் எப்போ வருவேன்.. எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்ட்டா வருவேன் என்று சொல்லுவார். அதனை மாற்றி தீக்சனா, நான் எப்போ ஃபார்முக்கு வருவேன்.. எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது.. ஆனால் முக்கியமான மேட்ச்ல நிச்சயமா நல்லா விளையாடுவேன்" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல் ரகம்.

குஜராத் அணிக்கு 173 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தல தோனியின் சிறப்பான கேப்டன்சி காரணமாக சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனை பாராட்டும் வகையில், நண்பன் படத்தில் விஜய்க்கு நன்றி சொல்ல ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த், தலைவா யூ ஆர் கிரேட் என்று கூறுவார்கள். அதனை சிஎஸ்கே ரசிகர்களாக ஜீவாவையும், ஸ்ரீகாந்தையும், விஜயாக தோனியும் மாற்றி, "தலைவா.. யூ ஆர் கிரேட்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எமோஷனல் டச்.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு குஜராத் அணி சென்னை அணியுடன் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்தது. அதனை சிவாஜி படத்தில் அடிவாங்கும் ரஜினி 1,2,3 என்று எண்ணுவார். அதற்கு வில்லன் ஆதி, "என்னடா எண்ணிட்டு இருக்க" என்று கேட்க, "ரஜினி, திருப்பி கொடுக்கனும்லா" என்று சொல்லுவார். அதுபோல் கிளைமாக்ஸில் திருப்பி கொடுப்பார். அதனை வில்லனாக ஆதியையும், ரஜினியாக ரஜினியையும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

குஜராத் அணிக்கு சேஸிங் கொடுத்தால் எளிதாக வெல்வார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை அணியிடம் குஜராத் அணி சேஸிங் செய்ய முடியாமல் வீழ்ந்துள்ளது. அதனை சிங்கம் 3 படத்தில் சூர்யா வில்லனை சுடுவதற்கு முன்பாக, "இந்த ஏரியால நீ நரகாசூரன் நகல் மாதிரி சுத்திட்டு இருக்கியாமே" என்று சொல்லுவார். அதில் சூர்யாவாக சென்னை அணி பவுலர்களையும், வில்லனாக குஜராத் அணியையும் மாற்றி, "நீ தான் இங்க எல்லாருக்கும் சேஸிங்ல பயம் காட்டுவியாமே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.
