For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14 கோடி கொடுத்து 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் வாங்கப்பட்ட டேரில் மிட்செல் சரியாக செயல்படாத நிலையில் கடந்த இரண்டு போட்டியில் அவரை நீக்கியது சிஎஸ்கே அணி.

எனினும், அவருடன் பேசிய மூத்த வீரர் தோனி அவருக்கு மீண்டும் சிஎஸ்கே அணியில் வாய்ப்பளிக்க காரணமாக இருந்தார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டேரில் மிட்செல் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார். இதற்கு முன் நான்கு அல்லது ஐந்தாவது வரிசையில் டேரில் மிட்செல் களமிறங்கி சரியாக ரன் குவிக்காத நிலையில் அவருக்காக பேட்டிங் வரிசையை மாற்றியது சிஎஸ்கே அணி.

CSK vs LSG IPL 2024 Daryl Mitchell disappoints Dhoni after failed to score runs

ரச்சின் ரவீந்திரா அணியில் இருந்து நீக்கப்பட்டார். அஜின்க்யா ரஹானேவுடன் துவக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரராக களமிறங்கினார். டேரில் மிட்செல் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார். இந்த நிலையில் போட்டியில் ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் இரண்டாவது ஓவரிலேயே களத்துக்கு வந்தார் டேரில் மிட்செல். அவர் 10 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணியின் ரன் ரேட் சரிந்தது.

டேரில் மிட்செல் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை வீணடித்தார். அது மட்டுமின்றி அவருக்காக தோனி எடுத்த முயற்சிகள் மற்றும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட மாற்றம் என எல்லாம் வீணாகிப் போனது. பின்னர் வந்த ஜடேஜா 19 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

CSK vs LSG : சிஎஸ்கே மெகா ரெக்கார்டு.. டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனை.. ஐபிஎல் தொடரில் நம்பர் 1 இடம்

பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் அபார ஆட்டம் ஆடி கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார். அவருடன் ஜோடி சேர்ந்த சிவம் துபே சிக்ஸர் மழை பொழிந்தார். ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்களும், சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்களும் குவித்தனர். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்தது. எனினும், லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் அபார ஆட்டம் ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து தன் அணியை வெற்றி பெற வைத்தார்.

Story first published: Tuesday, April 23, 2024, 21:17 [IST]
Other articles published on Apr 23, 2024
English summary
CSK vs LSG IPL 2024 : Daryl Mitchell disappoints Dhoni after failed to score runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+